ஏழு மாநிலங்களுக்கு சுப்ரீம் கோர்ட் அபராதம்

Added : ஆக 14, 2019
Advertisement

புதுடில்லி : மனித உரிமை நீதிமன்றங்கள் அமைப்பது தொடர்பான, தனதுஉத்தரவுக்கு பதிலளிக்காத, ஏழு மாநிலங்களுக்கு, உச்ச நீதிமன்றம் அபராதம் விதித்துள்ளது.

மனித உரிமை பாதுகாப்புச் சட்டத்தின் கீழ், மனித உரிமை நீதிமன்றங்கள் மற்றும் சிறப்பு அரசு வழக்கறிஞர் நியமிப்பது குறித்து பதிலளிக்கும்படி, அனைத்து மாநிலங்களுக்கும், உச்ச நீதிமன்றம், கடந்தாண்டு, ஜனவரியில் உத்தரவிட்டிருந்தது.இது தொடர்பான வழக்கு, நீதிபதிகள், தீபக் குப்தா, பி.ஆர்.கவாய் அமர்வு முன், நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.அப்போது, பதில் தாக்கல் செய்யாததுடன், வழக்கறிஞரும் ஆஜராகாததால், ராஜஸ்தான் மற்றும் உத்தரகண்ட் மாநிலங்களுக்கு, தலா, 1 லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப் பட்டது.

பதில் தாக்கல் செய்யாத, தெலுங்கானா, உத்தர பிரதேசம், ஒடிசா, மேகாலயா மற்றும் மிசோரம் மாநிலங்களுக்கு, தலா, 50 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.'நான்கு வாரங்களுக்குள் பதிலை தாக்கல் செய்ய வேண்டும்' என, இந்த மாநிலங்களுக்கு, அமர்வு உத்தரவிட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X