ஐ.சி.யு.,வில் ஜெட்லி தொடர்ந்து தீவிர சிகிச்சை

Added : ஆக 14, 2019
Advertisement

புதுடில்லி : டில்லி, 'எய்ம்ஸ்' மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள, பா.ஜ., மூத்த தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான, அருண் ஜெட்லி, 66, தொடர்ந்து, தீவிர சிகிச்சைப் பிரிவில் உள்ளார்.அவரின் இதயம் மற்றும் ரத்த ஓட்டம் சீராக உள்ளது என, மருத்துவமனை தெரிவித்துள்ளது.

பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான, முந்தைய அரசில், நிதி மற்றும் ராணுவ அமைச்சராக இருந்த அருண் ஜெட்லிக்கு, கடந்தாண்டு சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. இந்நிலையில், மூச்சுத் திணறல் மற்றும் உடல் சோர்வு காரணமாக, கடந்த, 9ம் தேதி, எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா உட்பட, மத்திய அமைச்சர்கள் உடல்நலம் விசாரித்தனர்.எய்ம்ஸ் மருத்துவமனை நேற்று வெளியிட்டுள்ள செய்தியில், 'ஜெட்லிக்கு, ஐ.சி.யு.,வில் தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்படுகிறது. இதயம் மற்றும் ரத்த ஓட்டம் சீராக உள்ளது' என, கூறப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X