பொது செய்தி

இந்தியா

ராம பிரானின் வாரிசுகள் நாங்கள்: உதய்பூர் அரச குடும்பம் பெருமிதம்

Updated : ஆக 14, 2019 | Added : ஆக 14, 2019 | கருத்துகள் (25)
Advertisement

உதய்பூர்: ''ராம பிரானின் வம்சாவளியை சேர்ந்தவர்கள் நாங்கள்,'' என, ராஜஸ்தான் மாநிலம், உதய்பூர் அரச குடும்பத்தைச் சேர்ந்த மகேந்திர சிங் கூறினார்.






உத்தர பிரதேச மாநிலம், அயோத்தியில், சர்ச்சைக்குரிய நிலம் தொடர்பான வழக்கு விசாரணை, உச்ச நீதிமன்றத்தில், ஐந்து நீதிபதிகள் அடங்கிய அரசியல் சாசன அமர்வு முன் நடந்து வருகிறது. கடந்த வெள்ளிக்கிழமை, இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, 'ராமரின் வம்சாவளிகள் யாரேனும் இப்போது உள்ளனரா' என, நீதிபதிகள் கேட்டனர்.





இதையடுத்து, ராஜஸ்தான் மாநிலம், ஜெய்ப்பூர் அரச குடும்பத்தைச் சேர்ந்த, பா.ஜ., பெண் எம்.பி., தியாகுமாரி, 'நாங்கள், ராமரின் வம்சாவளியைச் சேர்ந்தவர்கள்; குறிப்பாக, ராமரின் மகன் குசாவின் வாரிசுகள். ராமரின் வம்சாவளி நாங்கள் என்பதற்கான ஆதாரங்கள் உள்ளன. தேவைப்பட்டால், அவற்றை சமர்ப்பிக்கவும் தயார்' என, கூறினார். இது பெரும் பரபரப்பையும் சர்ச்சையையும் ஏற்படுத்தியது.





இந்நிலையில், இப்போது, ராஜஸ்தான் மாநிலம், மேவார் - உதய்பூர் அரச குடும்பத்தைச் சேர்ந்த மகேந்திர சிங்கும், 'நாங்கள் ராமரின் வம்சாவளியைச் சேர்ந்தவர்கள்' என, கூறியுள்ளார். மேலும், அவர் கூறுகையில், ''ராமரின் வாரிசுகள் பற்றி, உச்ச நீதிமன்ற நீதிபதிகள் கேட்டது, பத்திரிகைககள் வாயிலாக தெரிய வந்தது. நீதிமன்றம், எங்களை நாடலாம். ஏனெனில், நாங்கள் தான், ராமரின் உண்மையான வம்சாவளியைச் சேர்ந்தவர்கள்; அதற்கான எல்லா ஆவணங்களும், எங்களிடம் உள்ளன,'' என்றார்.

Advertisement




வாசகர் கருத்து (25)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
RSS.Madurai.2019 - Madurai,இந்தியா
18-ஆக-201911:10:25 IST Report Abuse
RSS.Madurai.2019 எது உண்மை எது பொய் என்று பொது மக்களுக்கு தெரிய கூடாதுனு , இந்த மாதுரி நியூஸ் மீடியா ல திட்ட மெட்டு வருது.
Rate this:
Share this comment
Cancel
14-ஆக-201914:53:07 IST Report Abuse
அண்ணாமலை ஜெயராமன் பாபரின் வாரிசுகள் என்ன சொல்கிறார்கள் என்பதையும் நீதிமன்றம் கேட்க வேண்டும்.
Rate this:
Share this comment
Cancel
Sampath Kumar - chennai,இந்தியா
14-ஆக-201912:29:23 IST Report Abuse
Sampath Kumar இல்லாத ஒண்ணுக்கு அடிச்சிக்கிறதுல நம்ம ஆளுகளுக்கு நிகர் யாரும் இல்லை நாட்டில் பற்றி எரிகிற விஷயம் எத்தனையோ இருக்கு அது எல்லாம் இவனுகளுக்கு தெரியாது
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X