காங்.,தலைவர்களுக்கு அசைவ விருந்து

Added : ஆக 14, 2019 | கருத்துகள் (1)
Advertisement

பெங்களூரு : கர்நாடகாவின் 50 சதவீத மாவட்டங்களில், வெள்ளம் சூழ்ந்ததில், ஏராளமானோர் வீடு, வாசலை இழந்து வீதிக்கு வந்துள்ளனர்;

விளைச்சலை இழந்து, விவசாயிகள் வருத்தத்தில் உள்ளனர். இத்தகைய சூழ்நிலையில், காங்கிரஸ் தலைவர்கள் அசைவ விருந்தில் பங்கேற்றது, சலசலப்பை ஏற்படுத்தியது. கர்நாடகாவின் வடக்கு, கடலோரம், மலைப்பகுதி மாவட்டங்களில், மழை, வெள்ள பாதிப்பு, மக்களின் இயல்பு வாழ்க்கையை பாதித்துள்ளது. ஆயிரக்கணக்கான வீடுகள் இடிந்துள்ளன. லட்சகணக்கான மக்கள் நிவாரண முகாம்களில், அடைக்கலம் புகுந்துள்ளனர்.அறுவடைக்கு தயாராக இருந்த விளைச்சலை இழந்து, விவசாயிகள் வேதனையில் வாடுகின்றனர். இத்தகைய சூழ்நிலையில், காங்கிரஸ் எம்.எல்.சி., நஜீர் அகமது, பக்ரீத் பண்டிகையை ஒட்டி, அவரது வீட்டில், ஆடம்பரமான விருந்துக்கு ஏற்பாடு செய்திருந்தார்.

இதில் முன்னாள் முதல்வர் சித்தராமையா, மூத்த தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, மாநில காங்கிரஸ் தலைவர் தினேஷ் குண்டுராவ், முன்னாள் அமைச்சர்கள் கே.ஜே.ஜார்ஜ், கிருஷ்ண பைரே கவுடா, ஜமிர் அகமது கான், முன்னாள் சபாநாயகர் ரமேஷ்குமார், மகாதேவப்பா உட்பட, முக்கிய பிரமுகர்கள் மட்டுமே பங்கேற்றனர்.காங்கிரஸ் தலைவர்கள் விருந்து சாப்பிடும் புகைப்படங்கள், சமூக வலை தளங்களில் பரவி வருகின்றன.

பிரியாணி, கல்மி கபாப், மீன் வறுவல் என, வகை வகையான அசைவ உணவுகள் காணப்படுகின்றன.வெள்ள பாதிப்பில் சிக்கியவர்களின், பிரச்னைகளை கேட்டறியாமல், காங்கிரஸ் தலைவர்கள் விருந்துண்ட புகைப்படங்கள், டுவிட்டரில் பரப்பி, 'பிரியாணி சாப்பிட நேரம் இருக்கும் தலைவர்களுக்கு, வெள்ள பாதிப்பு பகுதிகளுக்கு செல்ல நேரமில்லையா?' என, பா.ஜ.,வினர் கேள்வி எழுப்பியுள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Muruga Vel - Mumbai,இந்தியா
14-ஆக-201905:57:48 IST Report Abuse
 Muruga Vel மதநல்லிணக்கத்துக்காக பிரியாணி சாப்பிடாவிட்டால் சரிப்பட்டு வருமா
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X