காஷ்மீர் விவகாரம்; மன்னிப்பு கேட்டார் நியூயார்க் எம்.பி.,

Added : ஆக 14, 2019 | கருத்துகள் (23)
Advertisement

நியூயார்க்: 'காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்ட விவகாரத்தில் அமெரிக்கா தலையிட வேண்டும்; என்ன நடவடிக்கை எடுக்கப் போகிறது என்பதை விளக்க வேண்டும்' என அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் மைக் போம்பியோவுக்கு கடிதம் எழுதிய நியூயார்க் எம்.பி. டாம் சுயோஸ்சி 56 தன் செயலுக்கு மன்னிப்பு கேட்டுள்ளார்.






கடந்த 9ம் தேதி அவர் போம்பியோவுக்கு கடிதம் எழுதிய தகவல் மறுநாள் அமெரிக்காவில் வாழும் இந்தியர்களுக்கு தெரிய வந்தது. டாம் செயலை அவர்கள் கண்டித்தனர். 'இந்தியர்கள் ஆதரவில் வெற்றி பெற்று இந்தியர்களுக்கு எதிராக குரல் கொடுப்பதா' என கண்டித்தனர். அதையடுத்து இந்தியர்களின் கருத்தை அறிய சந்திக்க தயாராக இருக்கிறேன் என்றார் டாம். அதன்படி நேற்று முன்தினம் 100க்கும் மேற்பட்ட இந்தியர்கள் டாமை சந்தித்தனர். அவரிடம் காஷ்மீர் தொடர்பாக இந்தியாவின் நிலைப்பாட்டை தெரிவித்தனர்.





அதையடுத்து டாம் சுயோஸ்சி அமெரிக்க இந்தியர்களிடம் மன்னிப்பு கேட்டுள்ளார். அவர் நேற்று விடுத்த அறிக்கையில் 'காஷ்மீர் விவகாரத்தை புரிந்து கொள்ளாமல் அவசரப்பட்டதற்கு மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன். இந்த விவகாரம் தொடர்பாக அமெரிக்க இந்தியர்களுடன் ஆலோசனை நடத்தியிருக்க வேண்டும். தவறு இழைத்து விட்டேன்' என தெரிவித்துள்ளார். இதை அமெரிக்க இந்தியர்கள் வரவேற்றுள்ளனர்.

Advertisement




வாசகர் கருத்து (23)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
skv srinivasankrishnaveni - Bangalore,இந்தியா
15-ஆக-201905:06:50 IST Report Abuse
skv srinivasankrishnaveni பிபிசி எப்போதுமே பொய்களே தான் பேசும் , நேருக்கு அடிமை
Rate this:
Share this comment
Cancel
Gopi - Chennai,இந்தியா
14-ஆக-201912:14:10 IST Report Abuse
Gopi இவராச்சு வெளிநாட்டுக்காரர் காஷ்மீரின் வரலாறு தெரியாமல் தன் தவறான செயலுக்கு மன்னிப்பு கேட்டுள்ளார். ஆனா இங்க உள்ள மேதாவிகள் செய்யும் செயல்கள் நாட்டிற்கு இழுக்கை வரவழைக்கிறது
Rate this:
Share this comment
Cancel
Nallavan Nallavan - Kolkata,இந்தியா
14-ஆக-201910:43:10 IST Report Abuse
Nallavan Nallavan பிபிசி கஷ்மீரை "இந்தியா ஆக்குபைட் கஷ்மீர்" என்கிறது ......... இதை இந்தியா கண்டித்ததுண்டா ??
Rate this:
Share this comment
Sridhar - Jakarta,இந்தோனேசியா
14-ஆக-201911:23:13 IST Report Abuse
Sridharதிரும்பி BRITISH OCCUPIED NORTHERN IRELAND னு சொன்னா போச்சு OCCUPY தான் அவனுகளுக்கு கைவந்த கலையாச்சே...
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X