கோர்ட் செய்தி

தமிழ்நாடு

மது குடித்து கல்லுாரிக்கு வந்த மாணவர்கள் காமராஜர் இல்லத்தை சுத்தப்படுத்த வேண்டும்

Added : ஆக 14, 2019 | கருத்துகள் (9)
Share
Advertisement
 மது குடித்து கல்லுாரிக்கு வந்த மாணவர்கள் காமராஜர் இல்லத்தை சுத்தப்படுத்த வேண்டும்

மதுரை: மது குடித்து வகுப்பிற்கு வந்த அருப்புக்கோட்டை தேவாங்கர் கலைக் கல்லுாரி மாணவர்கள் 8 பேர், விருதுநகரில் உள்ள காமராஜர் இல்லத்தை சுத்தம் செய்ய உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டது.

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை தேவாங்கர் கலைக் கல்லுாரியில் பி.எஸ்.சி., (கம்ப்யூட்டர் அறிவியல்) மூன்றாம் ஆண்டு படிக்கும் 8 மாணவர்கள் மது போதையில் வகுப்பிற்கு வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அவர்கள் நான்காவது பருவத்தேர்வு (செமஸ்டர்) எழுத அனுமதிக்கப்பட்டனர். 'ஐந்தாவது பருவத்தேர்வு எழுத அனுமதிக்க முடியாது. கல்லுாரி மாற்றுச் சான்று வழங்கப்படும். வேறு கல்லுாரியில் சேர்ந்து கொள்ளலாம்,' என கல்லுாரி ஒழுங்கு நடவடிக்கைக்குழு முடிவு செய்தது.

மாணவர்கள் 8 பேரும், 'கல்லுாரியில் தொடர்ந்து படிக்க எங்களை அனுமதிக்க, நிர்வாகத்திற்கு உத்தரவிட வேண்டும்,' என உயர்நீதிமன்ற கிளையில் மனு செய்தனர். நீதிபதி ஆர்.சுரேஷ்குமார்: மாணவர்கள் தவறை உணர்ந்து, நிபந்தனையற்ற வருத்தம் தெரிவித்துள்ளனர். எதிர்காலத்தில் இதுபோல் நடக்க மாட்டோம் என உறுதியளித்துள்ளனர். அவர்கள் சாதாரண குடும்ப பின்னணியிலிருந்து வந்துள்ளனர். அவர்களின் கல்வி பாதிக்கக்கூடாது. மாணவர்களை சீர்திருத்தும் வகையில், கல்லுாரி நாட்களில் ஒழுக்கமுடன் திகழ அவர்களின் எதிர்காலம் கருதி கீழ்க்கண்ட உத்தரவை இந்நீதிமன்றம் பிறப்பிக்கிறது.

* தமிழக முதல்வராக இருந்த காமராஜர் மதுவிலக்கு கொள்கையை வலியுறுத்தினார். மனுதாரர்கள் சுதந்திரதினமான நாளை (ஆக.,15) காலை 10:00 முதல் மாலை 4:00 மணி வரை விருதுநகர் காமராஜர் பிறந்த இல்லத்தில் சுத்தம் செய்யும் பணியை மேற்கொள்ள வேண்டும். இல்லத்திற்கு வரும் பார்வையாளர்களுக்கு உதவிட வேண்டும். மாலை 4:00 முதல் 6:00 மணி வரை, 'மதுவை மறந்து விடு- மனிதனாய் வாழ்ந்து விடு', 'மது அருந்தாதே-மரியாதை இழக்காதே,' 'குடியை மறந்து விடு- குடும்பத்தை வாழவிடு,' 'குடிப்பதை நிறுத்திவிட்டு குடிப்பவன் நட்பை ஒதுக்கிவிடு,' உட்பட மதுவிற்கு எதிரான 16 தமிழ் வாசகங்கள் அடங்கிய பதாகைளுடன் காமராஜர் இல்லம் முன் நின்று கோஷமிட்டு, மக்களிடம் பிரசாரம் செய்ய வேண்டும்.

* இதை ஒரு உதவிப் பேராசிரியர் மூலம் கல்லுாரி நிர்வாகம் கண்காணிக்க வேண்டும். உதவிப் பேராசிரியர் உறுதி செய்து, கல்லுாரி நிர்வாகத்திடம் அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும்.

* அறிக்கை அடிப்படையில் மனுதாரர்களிடம் கல்விக் கட்டணத்தை பெற்றுக்கொண்டு, அவர்கள் தொடர்ந்து ஐந்தாவது பருவம்வரை கல்லுாரியில் தொடர்ந்து படிக்க நிர்வாகம் அனுமதிக்க வேண்டும்.

* காமராஜர் இல்லத்தில் மாணவர்களின் செயல்பாட்டை விருதுநகர் டவுன் இன்ஸ்பெக்டர் கண்காணித்து நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்.

* நீதிமன்ற உத்தரவை மனுதாரர்கள் நிறைவேற்றத் தவறினால், அவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை குழுவின் முடிவை செயல்படுத்த கல்லுாரி நிர்வாகம் நடவடிக்கை எடுக்கலாம். இந்த உத்தரவு நிறைவேற்றப்பட்டது குறித்து மனுதாரர்கள், கல்லுாரி முதல்வர் ஆக.,19 நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்றார்.

Advertisement


வாசகர் கருத்து (9)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
RM -  ( Posted via: Dinamalar Android App )
14-ஆக-201913:23:51 IST Report Abuse
RM Catch all the teenagers using Tasmak , make them to clean all public places daily two hours for few weeks.Eve teasers, driving bikes without licence , damaging public property for these kind of misbehaviours also should be taken into accountThis kind of punishment is used in European countries .
Rate this:
Cancel
LovelyMarees - Kutty Japan, Cracker City.,இந்தியா
14-ஆக-201912:44:00 IST Report Abuse
LovelyMarees பூரண மது விலக்கு சாத்தியமில்லை. குடிப்பவர்கள் திருந்தினால் தான் உண்டு. மது விலக்கு அமல்படுத்தினால் கள்ளச்சாராயம் அதிகமாகும். அரசும், அரசியல்வியாதிகளும் மதுவிற்பனையையும் மதுக்கூடத்தையும் குறைக்க மாட்டாங்க. மக்கள் செய்த தவறு இந்த தலைமுறைக்கு குடிக்கறது தப்புனு சொல்லி வளர்க்காமல் விட்டது. நல்லதுகெட்டது சொல்லி வளருங்க பிள்ளைகளை. சினிமாபாக்குறத தடைபண்ணுக. இப்பவுள்ள சினிமால நடிக்கிற கூத்தாடிங்க குடிக்கற மாறியும் ரவுடித்தனம் பண்றமாறியும் காட்சி இருக்கு அதப்பாத்துட்டு இப்பவுள்ள சில தருதலைக அதேமாதிரி ரவுடித்தனம் பண்ணுதுங்க. வீட்டுல பெத்த நீங்களும் கண்டிக்கமாடிங்க பள்ளிக்கூடத்திலையும் ஆசிரியரும் கண்டிக்கக்கூடாது அப்போ எப்புடி பிள்ளைக திருந்தும். வீட்டுலையும் பள்ளிக்கூடத்திலையும் அடிச்சு கண்டிச்சு வளத்தா போலிஸ்க்கிட அடிவாங்க வேண்டிவராது.
Rate this:
skv srinivasankrishnaveni - Bangalore,இந்தியா
15-ஆக-201903:59:16 IST Report Abuse
skv srinivasankrishnaveniஎதனால் சாதியமில்லே மது இல்லாத மாநிலமாக தான் இருந்துது எம் ஜீ ஆர் ஆண்டவரையிலும் முகவின் உபயம் தான் தெருக்குத்தெரு டாஸ்மாக் திறந்துகோடீஸ்வரநாஙுக எல்லா திமுக அண்ட் அதிமுகத்தலைவருள் எல்லோரும்...
Rate this:
Cancel
தமிழ் மைந்தன் - coiambatore,இந்தியா
14-ஆக-201909:01:02 IST Report Abuse
தமிழ் மைந்தன் குடிச்சவனுக்கு ஓகே..........இதை தயாரித்த கருணாநிதி குடும்பம், சசிகலா குடும்பம், சிதம்பரம் குடும்பம்,டி.ஆர்.பாலு குடும்பம், கிருஸ்தவ பாதிரியார் குடும்பங்களுக்கு என்ன தண்டனை அய்யா?...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X