மழை நீர் சேகரிப்பு வசதி; மின் வாரியம் அலட்சியம்| Dinamalar

எக்ஸ்குளுசிவ் செய்தி

தமிழ்நாடு

மழை நீர் சேகரிப்பு வசதி; மின் வாரியம் அலட்சியம்

Added : ஆக 14, 2019
மழை நீர் சேகரிப்பு வசதி; மின் வாரியம் அலட்சியம்

அனைத்து அலுவலகங்களிலும், மழை நீரை சேகரிக்கும் வகையில், கட்டமைப்பு வசதிகளை, மின் வாரியம் ஏற்படுத்துமா என்ற எதிர்பார்ப்பு, ஊழியர்களிடம் எழுந்துள்ளது.

தமிழக மின் வாரியத்திற்கு, ஒன்பது மண்டல அலுவலகங்கள்; 42 மாவட்ட அலுவலகங்கள்; 3,000 பிரிவு அலுவலகங்கள் உள்ளன. மேலும், மின் நிலையங்கள், துணை மின் நிலையங்களில் நிர்வாக அலுவலகம் என, அதிக எண்ணிக்கையில் கட்டுமானங்கள் உள்ளன. அவை, முறையான பராமரிப்பு இன்றி காணப்படுகின்றன.

மழை நீரை வீணாக்காமல், சேகரிக்கும் வகையில், வீடு உள்ளிட்ட கட்டுமானங்களில், மழை நீர் சேகரிப்பு கட்டமைப்பை ஏற்படுத்துமாறு, சில ஆண்டுகளுக்கு முன், தமிழக அரசு உத்தரவிட்டது; பலர், அதை பின்பற்றவில்லை. இரு ஆண்டுகளாக, போதிய மழை பெய்யாததால், வறட்சி நிலவுகிறது. மேலும், நீர்நிலைகள் துார்வாரப்படாததால், மழை பெய்தாலும், அந்த நீரை சேகரிக்க முடியாமல் வீணாகிறது. இதனால், தற்போது, சென்னை உள்ளிட்ட நகரங்களில், மக்கள், தண்ணீர் கிடைக்காமல் சிரமப்பட்டு வருகின்றனர்.

இதையடுத்து, கட்டுமானங்களில், மழை நீர் சேகரிப்பு கட்டமைப்பு ஏற்படுத்துமாறு, மீண்டும், அரசு கண்டிப்புடன் தெரிவித்துள்ளது. ஆனால், மின் வாரியம் அலட்சியம் காட்டி வருகிறது. எனவே, பிரிவு உள்ளிட்ட அனைத்து அலுவலகங்களிலும், மழை நீர் சேகரிக்கும் கட்டமைப்பை, மின் வாரியம் ஏற்படுத்துமா என்ற எதிர்பார்ப்பு, ஊழியர்களிடம் எழுந்துள்ளது.

- நமது நிருபர்-

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X