தமிழ்நாடு

கூட்டுறவு வங்கி ஊழியர்கள் பணியிட மாற்றத்தில் அரசியல் பழிவாங்கப்பட்டதாக சங்கங்கள் கொந்தளிப்பு

Added : ஆக 14, 2019 | கருத்துகள் (1)
Share
Advertisement
மதுரை, மதுரை நகர் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி ஊழியர்கள் பணியிடமாற்றத்தில் அரசியல் ரீதியாக பழிவாங்கப்பட்டதாக சர்ச்சை எழுந்துள்ளது.இந்த வங்கியின் கீழ் மதுரை, தேனி மாவட்டங்களில் 47 கிளைகள் உள்ளன. இங்கு ஒன்பதாண்டுகளாக ஊழியர்களுக்கு பதவி உயர்வு மற்றும் பணியிட மாற்றம் வழங்கப்படவில்லை. கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லுார் ராஜு மதுரையை சேர்ந்தவராக இருந்தும் கூட
 கூட்டுறவு வங்கி ஊழியர்கள் பணியிட மாற்றத்தில்  அரசியல் பழிவாங்கப்பட்டதாக சங்கங்கள் கொந்தளிப்பு

மதுரை, மதுரை நகர் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி ஊழியர்கள் பணியிடமாற்றத்தில் அரசியல் ரீதியாக பழிவாங்கப்பட்டதாக சர்ச்சை எழுந்துள்ளது.இந்த வங்கியின் கீழ் மதுரை, தேனி மாவட்டங்களில் 47 கிளைகள் உள்ளன. இங்கு ஒன்பதாண்டுகளாக ஊழியர்களுக்கு பதவி உயர்வு மற்றும் பணியிட மாற்றம் வழங்கப்படவில்லை. கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லுார் ராஜு மதுரையை சேர்ந்தவராக இருந்தும் கூட கண்டுகொள்ளவில்லை என சங்க நிர்வாகிகள் குற்றம் சாட்டினர். இந்நிலையில் இவ்வங்கி தலைவராக எம்.எஸ்.பாண்டியன் தேர்வு செய்யப்பட்டபின் பதவி உயர்வு மற்றும் மாறுதலுக்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டது. சில நாட்களுக்கு முன்பு 34 உதவி மேலாளர்களுக்கு மேலாளர் பதவி உயர்வு மற்றும் ஊழியர்கள் பணியிட மாற்றமும் செய்யப்பட்டனர்.இதில் ஆளும் கட்சி சங்க ஊழியர்கள் அருகில் உள்ள கிளைகளுக்கும், பிற சங்கங்களின் நிர்வாகிகளுக்கு தொலைதுார கிளைகளுக்கும் பணியிட மாற்றம் செய்யப்பட்டு அரசியல் ரீதியாக பழிவாங்கப்பட்டுள்ளதாக சர்ச்சை எழுந்துள்ளது.ஊழியர்கள் கூறியதாவது: ஒன்பதாண்டுகளாக பல்வேறு போராட்டங்கள் நடத்தப்பட்டன. தினமலர் நாளிதழில் செய்தி வெளியானது. அதன் எதிரொலியாக அமைச்சர், வங்கி நிர்வாகத்தினர் கவனத்திற்கு சென்று பதவிஉயர்வு, பணியிட மாற்றம் வழங்கப்பட்டது. அரசியல் உள்நோக்கத்துடன் அருகிலுள்ள கிளைகளில் காலியிடம் இருந்தும் தொலைதுார கிளைகளுக்கு சிலர் துாக்கியடிக்கப்பட்டு பழிவாங்கப்பட்டுள்ளனர். ஆறு மாதங்களுக்கு முன் வந்தவர்களை கூட கேட்காமல் மாற்றியுள்ளனர்.ஆளும்கட்சி சங்க ஊழியர் பதவி உயர்வு பெற்று அதே அலுவலகங்களில் நீடிக்கின்றனர். உதவி மேலாளர் பதவி உயர்வு 41 பேருக்கு வழங்கப்பட உள்ளது. இதிலும் ஆளும் கட்சியினர் 'அரசியல்' செய்ய திட்டமிட்டுள்ளனர் என்றனர்.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
bellie kumar - jubail,சவுதி அரேபியா
14-ஆக-201909:22:24 IST Report Abuse
bellie kumar ஊழலின் ஊற்று கூட்டுறவு வங்கியில் ஆரம்பிக்கிறது. கூட்டுறவு சங்கத்தில் நியாயமாக யாருக்கும் லோன் கிடைப்பதில்லை. செயலாளர் நெருங்கிய வட்டாரத்திற்கு மட்டும் லோன் கொடுப்பார்கள் பினாமியாக. இவர்களை இட மாறுதல் செய்வதன் மூலம் நியாயம் கிடைக்க வாய்ப்பு உள்ளது.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X