அரசியல் செய்தி

தமிழ்நாடு

ஐ.சி.யு.,வில் ஜெட்லி தொடர்ந்து தீவிர சிகிச்சை

Updated : ஆக 14, 2019 | Added : ஆக 14, 2019 | கருத்துகள் (17)
Advertisement
 ஐ.சி.யு.,வில் ஜெட்லி  தொடர்ந்து தீவிர சிகிச்சை

புதுடில்லி : பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான, முந்தைய அரசில், நிதி மற்றும் ராணுவ அமைச்சராக இருந்தவர், பா.ஜ., மூத்த தலைவர், அருண் ஜெட்லி. கடந்தாண்டு அவருக்கு சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. இதற்காக, அவர் தொடர்ந்து சிகிச்சை மேற்கொண்டு வந்தார்.உடல்நலம் காரணமாக, இந்தாண்டு நடந்த லோக்சபா தேர்தலில் அவர் போட்டியிடவில்லை. இந்நிலையில், மூச்சுத் திணறல் மற்றும் உடல் சோர்வு காரணமாக, கடந்த, 9ம் தேதி, எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.





பிரதமர் நரேந்திர மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா உள்பட, மத்திய அமைச்சர்கள், பா.ஜ., மூத்த தலைவர்கள், மருத்துவமனை சென்று உடல்நலம் விசாரித்தனர்.எய்ம்ஸ் மருத்துவமனை நேற்று வெளியிட்டுள்ள செய்தியில், 'அருண் ஜெட்லிக்கு, ஐ.சி.யு.,வில் தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்படுகிறது. அவரின் இருதயம் மற்றும் ரத்த ஓட்டம் சீராக உள்ளது' என, கூறப்பட்டுள்ளது.


Advertisement


வாசகர் கருத்து (17)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Malick Raja - jeddah,சவுதி அரேபியா
17-ஆக-201913:04:49 IST Report Abuse
Malick Raja மனிதவாழ்க்கையை உணராமல் தாங்களெல்லாம் நிலையாக இருக்கப்போவதை போல பலவாசகர்களும் கருத்துக்கள் கூறி இருப்பது வேடிக்கையாகவும் அதே வாடிக்கையாகவும் இருக்கிறது .. ஆறிலும் சாவு நூறிலும் சாவு என்பதும் இறப்பின்றி பிறப்பில்லை என்பதையும் உணர்பவனே மனிதன் .. மாண்புமிகு முன்னாள் மத்திய அமைச்சர் அருண் அவர்கள் நல்ல உடல் நலத்துடன் கண்காணிப்புடனும் வாழ்ந்தவர் .. காலக்கெடு முடிந்தவுடன் மட்டுமே உலகைவிட்டு பிரியமுடியும் அவரின் உடல்நிலை ஆரோக்கியமுடன் திரும்பிவர விளைவோம் .. இதற்காக அவரை போற்றுவதும் தூற்றுவதும் அறியாமையின் வெளிப்பாடு .. உணர்பவர்கள் மனிதர்கள்
Rate this:
Share this comment
Cancel
Rengaraj - Madurai,இந்தியா
14-ஆக-201910:08:22 IST Report Abuse
Rengaraj சிறந்த நிர்வாகி. சட்ட நுணுக்கங்கள் அறிந்தவர். பணமதிப்பு இழப்பு, ஜி.எஸ்.டி இவை அமுலுக்கு வரும் முன்னரும் வந்த பின்னரும் நடைமுறைப்படுத்துவதில் உள்ள சிக்கல்களை கண்டறிந்து, ஆராய்ந்து அவற்றை தீர்ப்பதற்கு உறுதியாகவும் மிகவும் உறுதுணையாகவும் இருந்தவர். பிரதமர் மோடிக்கு நம்பிக்கையாக செயல்பட்டவர். திட்டங்கள் செயலாற்றுவதில் அவரின் அனுபவத்தை இப்போது உள்ள அரசு அதிகாரிகள் நன்கு பயன்படுத்துவார்கள் என்று நம்புவோம்.
Rate this:
Share this comment
சுந்தரம் - Kuwait,குவைத்
14-ஆக-201910:11:29 IST Report Abuse
சுந்தரம் சட்ட நுணுக்கங்கள் அறிந்தவர். அதனால்தான் போபால் விஷ வாயு கசிவு வழக்கில் குறிப்பிட்ட அந்த நபரை வெளிநாட்டுக்கு தப்பிக்க வைத்தார். பின்னாட்களில் அதற்கு கான் கிராஸ் காரணம் என்று அவரே குற்றம் சாட்டினார்....
Rate this:
Share this comment
SENTHIL - dammam,சவுதி அரேபியா
14-ஆக-201912:47:05 IST Report Abuse
SENTHILEvery action has a reaction...
Rate this:
Share this comment
Cancel
Thiru, Coimbatore - Coimbatore,இந்தியா
14-ஆக-201909:52:53 IST Report Abuse
Thiru, Coimbatore நல்ல மனிதர்.. சிறந்த நிர்வாகி.. விரைவில் நலமடைய இறைவனை வேண்டுகிறேன் நமது முதல்வர் கூறியதைப் போல பூமிக்கு பாரமாக இல்லாதவர்.. நாட்டை உண்மையாக நேசித்தவர்
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X