அரசியல் செய்தி

தமிழ்நாடு

நீலகிரியில் மழை பாதிப்பு: துணை முதல்வர் ஆய்வு

Added : ஆக 14, 2019
Advertisement

பந்தலுார்:பந்தலுார் பகுதியில், மழையால் பாதிக்கப்பட்ட பகுதியில், துணை முதல்வர் பன்னீர்செல்வம், நேரில் ஆய்வு மேற்கொண்டார்.நீலகிரி மாவட்டத்தில் பெய்த கனமழையால் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கு, மண் சரிவால், மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. கூடலுார், பந்தலுார் பகுதிகளை சேர்ந்த, 500 குடும்பங்கள், 15 முகாம்களில் தங்க வைக்கப்பட்டிருந்தனர். இரு நாட்களாக, காலநிலையில் மாற்றம் ஏற்பட்டதால், முகாம்களில் இருந்த மக்கள், தங்கள் வீடுகளுக்கு திரும்பி வருகின்றனர்.பாதிக்கப்பட்ட பகுதிகளை ஆய்வு செய்ய, நேற்று வந்த துணை முதல்வர் பன்னீர் செல்வம், கூடலுார் பஜாரில், மக்களிடம் மனுக்கள் பெற்றுக் கொண்டார். பந்தலுார் அருகே எலியாஸ் கடை பகுதியில் ஏற்பட்ட நிலச்சரிவை பார்வையிட்ட பின், சேரங்கோடு சமுதாய கூடம், சேரம்பாடி திருமண மண்டபம், அம்பலமூலா அரசு பள்ளி வளாகம் ஆகிய, மூன்று முகாம்களில் தங்கியிருந்த மக்களை சந்தித்து, நிவாரணப் பொருட்கள் வழங்கினார். பிற முகாம்களில், அதிகாரிகள் நிவாரணப் பொருட்கள் வழங்கினர்.ஆய்வின் போது, அமைச்சர் ராதாகிருஷ்ணன், கலெக்டர் இன்னசென்ட் திவ்யா, தேனி எம்.பி., ரவீந்திரநாத் குமார் உட்பட பலர் உடனிருந்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X