தமிழ்நாடு

ரயில்வே ஸ்டேஷனில் சங்குகள் சிக்கியது

Updated : ஆக 14, 2019 | Added : ஆக 14, 2019
Share
Advertisement
சிவகங்கை:சுதந்திர தின பாதுகாப்பிற்காக சிவகங்கையில் வெடிகுண்டு நுண்ணறிவு பிரிவு போலீசார் ரயில் பயணிகள் மற்றும் தண்டவாளத்தில் சோதனை மேற்கொண்டனர்.சுதந்திர தினத்தை முன்னிட்டு பாதுகாப்பு கருதி ரயில்கள், மக்கள் அதிகம் கூடும் இடங்களில் கூடுதல் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படுவர். அந்த வகையில் சிவகங்கை எஸ்.பி., ரோஹித்நாதன் உத்தரவுபடி வெடிகுண்டு நுண்ணறிவு

சிவகங்கை:சுதந்திர தின பாதுகாப்பிற்காக சிவகங்கையில் வெடிகுண்டு நுண்ணறிவு பிரிவு போலீசார் ரயில் பயணிகள் மற்றும் தண்டவாளத்தில் சோதனை மேற்கொண்டனர்.

சுதந்திர தினத்தை முன்னிட்டு பாதுகாப்பு கருதி ரயில்கள், மக்கள் அதிகம் கூடும் இடங்களில் கூடுதல் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படுவர். அந்த வகையில் சிவகங்கை எஸ்.பி., ரோஹித்நாதன் உத்தரவுபடி வெடிகுண்டு நுண்ணறிவு பிரிவு போலீசார் நேற்று காலை ராமேஸ்வரம் - திருச்சி செல்லும் ரயில் பயணிகளின் உடமைகள் மற்றும் ரயில் தண்டவாளத்தில் மெட்டல் டிடெக்டர் மூலம் பரிசோதனை செய்தனர்.

போலீஸ் மோப்ப நாய் ஜூலி முக்கிய இடங்களில் வெடிகுண்டு பொருட்கள் வைக்கப்பட்டுள்ளதா என கண்டறிந்தது. சிவகங்கை இன்ஸ்பெக்டர் மோகன் தலைமையில் சிறப்பு எஸ்.ஐ.,க்கள் மைக்கேல், தங்கராஜ், உதயகுமார், போலீசார் மணிவண்ணன், தனபால், ஜெகதீஸ்ராஜா உள்ளிட்டோர் சோதனை செய்து, பயணிகள் பாதுகாப்பான பயணம் மேற்கொள்ள விழிப்புணர்வு வழங்கினர்.


சிக்கிய கடத்தல் சங்குகள்



சிவகங்கை ரயில்வே ஸ்டேஷனில் வெடிகுண்டு சிறப்பு பிரிவு போலீசார் சோதனையில் ஈடுபட்ட போது, ரயிலில் வனத்துறையால் தடை செய்யப்பட்ட 200 க்கும் மேற்பட்ட கடல் சங்குகள் கடத்தி வந்தது தெரியவந்தது. சங்குகளை கடத்திய பாம்பன், பரமக்குடியை சேர்ந்த இருவரை பிடித்த போலீசார், கடல் சங்குகளுடன் அவர்கள் இருவரையும் சிவகங்கை வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர்.

அவர்கள் இருவரும் ஒரு சங்கு ரூ.10க்கு ராமேஸ்வரத்தில் வாங்கி வந்து, திருஷ்டி சங்கு தயாரிக்கவும், அழகு சாதன பொருட்களாக தயாரிக்க இச்சங்கு ஒன்றை 200 ரூபாய் வரை விற்பதாக வனத்துறையினர் தெரிவித்தனர். கடல் வனஉயிரின பாதுகாப்பு சட்டத்தின் படி கடலில் இருந்து சங்குகளை கடத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X