பொது செய்தி

இந்தியா

பூமியிலிருந்து இன்று பிரிகிறது 'சந்திரயான் -2'

Updated : ஆக 14, 2019 | Added : ஆக 14, 2019 | கருத்துகள் (22)
Advertisement
பூமியிலிருந்து இன்று பிரிகிறது 'சந்திரயான் -2'

பெங்களூரு:நிலவை ஆராய, இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம், 'இஸ்ரோ'வால் விண்ணுக்கு ஏவப்பட்டுள்ள, 'சந்திரயான் -2' விண்கலம், இன்று, பூமியின் சுற்றுவட்டப் பாதையிலிருந்து பிரிந்து, நிலவின் சுற்று வட்டப் பாதையை அடையும்.ஆந்திராவின், ஸ்ரீஹரிகோடா விண்வெளி ஏவுதளத்திலிருந்து, ஜூலை22 ல், நிலவுக்கு பயணம் மேற்கொண்டது, சந்திரயான் - 2 விண்கலம். 3,485 கிலோ எடையுள்ள அந்த விண்கலத்தில், நிலவில் இறங்கவும், சுற்றி வரவும், ஆய்வு செய்யவும் அதிநவீன கருவிகள் உள்ளன.இதுவரை, பூமியின் சுற்று வட்டப்பாதையில் சுற்றி வந்த அந்த விண்கலம், ஆறு முறை உயர்த்தப்பட்டு, இன்று அதிகாலை, 3:00 - 4:00 மணிக்குள், நிலவின் சுற்று வட்டப்பாதைக்கு உந்தப்படுகிறது.

இதற்கான பணிகளில், இஸ்ரோ விஞ்ஞானிகள் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர். வரும், 20 ம் தேதி, நிலவின் சுற்று வட்டப்பாதையை அடையும் சந்திரயான் - 2, மேலும் பல நாட்கள் பயணித்து, செப்டம்பர் ௭ல், நிலவில் தரையிறங்கும் என, எதிர்பார்க்கப்படுகிறது.இதுவரை, நிலவின் தென் பகுதியில், எந்த நாட்டின் விண்கலங்களும் தரையிறங்காத நிலையில், அந்த சாதனையை, இஸ்ரோ விஞ்ஞானிகள் படைக்க உள்ளனர்.


Advertisement


வாசகர் கருத்து (22)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Guhan - Dar_es_salaam,தான்சானியா
14-ஆக-201917:16:42 IST Report Abuse
Guhan That's, why Mr.Trump claimed, INDIA is developed Nation
Rate this:
Share this comment
Cancel
Navn - Newyark,யூ.எஸ்.ஏ
14-ஆக-201916:12:54 IST Report Abuse
Navn பாராட்டுக்குரியது. இதைவிட அவசியம் தேசத்தின் பணத்தையும், அறிவையும் இந்தியாவின் வறுமைக்கு காரணம் என்ன என்ற ஆராய்ச்சிக்கு பயன்படுத்தலாம். நம்மை சுற்றியுள்ள எல்லா நாடுகளும் சுகாதாரத்திலும், கல்வியறிவிலும், தன்னிறைவிலும் வேகமாக முன்னேறிவருகிறது. நம் தேசத்தில் இன்னும் நல்ல கக்கூஸ் கூட இல்லையே....
Rate this:
Share this comment
Cancel
Babu -  ( Posted via: Dinamalar Android App )
14-ஆக-201914:54:28 IST Report Abuse
Babu கடவுளோட(எந்த மதமோ) ஒரு போட்டோ எடுக்குமா? 75 பிரச்சனை தீரும். (ஐய்யய்யோ Photoshop படிச்ச கிருமிங்க எல்லா மதத்திலயும் இருக்காங்களே)
Rate this:
Share this comment
14-ஆக-201916:29:53 IST Report Abuse
அண்ணாமலை ஜெயராமன்கடவுளை ஏற்கெனவே போட்டோ எடுத்துகிட்டுதானே இருக்கு , இந்து மத நம்பிக்கையே ஆண்டவன் என்பவன் ஆதியும் அந்தமும் இல்லாத அண்ட சரசாரங்களில் பரந்து விரிந்து கிடக்கும் பரம்பொருள். அதைத்தான் போட்டோ எடுத்துக்கொண்டுள்ளது....
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X