திருவனந்தபுரம் : கேரளாவில் கனமழை, வெள்ளத்தை தொடர்ந்து பலவிதமான நோய்கள் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக அம்மாநில சுகாதாரத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.

கேரளாவில் கடந்த சில நாட்களாக கனமழை, மணச்சரிவு, வெள்ளம் என மக்கள் தவித்து வருகின்றனர். 2 நாட்களாக மழை ஓய்ந்துள்ள நிலையில் 3 மாவட்டங்களுக்கு இந்திய வானிலை மையம் மீண்டும் 'ரெட் அலர்ட்' விடுத்துள்ளது. இதனால் மக்கள் பீதியில் ஆழ்ந்துள்ள நிலையில், தற்போது நோய்கள் பரவும் அபாயமும் ஏற்பட்டுள்ளதாக கேரள சுகாதாரத்துறை அமைச்சர் சைலஜா தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் கூறுகையில், எச்1என்1 வைரஸ், மஞ்சள் காமாலை உள்ளிட்ட பாக்டீரியாவால் பரவும் நோய் பாதிப்புகள் ஏற்பட வாய்ப்புள்ளதால் அதிக கவனம் செலுத்தி வருகிறோம். நோய் தடுப்பு மருந்துகள் விநியோகம் செய்து வருகிறோம். மழைக்காலங்களில் தான் எச்1என்1 வைரஸ் பாதிப்பு அதிகம் இருக்கும் என்பதால் 1 கோடிக்கும் அதிகமான மாத்திரைகள் விநியோகம் செய்யப்பட்டுள்ளது. நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டிருப்பவர்களுக்கு நோய் பாதிப்பு உள்ளதா என பரிசோதித்து வருகிறோம். யாருக்காவது நோய் பாதிப்பு இருந்தால் அவர் உடனடியாக மருத்துவமனைகளில் அமைக்கப்பட்டுள்ள தனிப்பிரிவுகளுக்கு மாற்றப்படுவார்கள் என்றார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE