பொது செய்தி

இந்தியா

சிபிஐ.,யின் செயல்பாடு மோசம் : தலைமை நீதிபதி

Updated : ஆக 14, 2019 | Added : ஆக 14, 2019 | கருத்துகள் (48)
Advertisement

புதுடில்லி : அரசியல் சார்ந்த வழக்குகளில் சிபிஐ.,யின் செயல்பாடு மோசமாக உள்ளதாக சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தெரிவித்துள்ளார்.





டில்லியில் நேற்று (ஆக.,13) சிபிஐ சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த விழாவில் கலந்து கொண்டு பேசிய தலைமை நீதிபதி, சிபிஐ தனக்கான சிறப்பான இடத்தை உருவாக்கிக் கொண்ட சில புலனாய்வு அமைப்புக்களில் ஒன்றாக உள்ளது. ஆனால், அரசியல் இல்லாத வழக்குகளில் மட்டும் சிபிஐ நன்றாக வேலை செய்வது ஏன்? எந்தவொரு பொது நிறுவனத்தின் வெற்றியை காட்டிலும் தோல்விதான் மக்கள் கவனத்தை ஈர்க்கிறது. அரசியல் சார்ந்த வழக்குகளில் சிபிஐ.,யின் செயல்பாடு மோசமாக உள்ளது.




சிபிஐ.,யை கட்டுப்பாட்டில் இருந்து விடுவிக்க வேண்டும். ஆடிட்டர் ஜெனரல், தேசிய தணிக்கையாளர் ஆகியோருக்கு சமமான நிலையை அளிக்க வேண்டும். பல உயர்மட்ட மற்றும் அரசியல் ரீதியான முக்கிய வழக்குகளில் நீதித்துறையின் தரத்தை சிபிஐ.,யால் பூர்த்தி செய்ய முடியவில்லை. சிபிஐ.,யின் முக்கிய அம்சங்களை அரசின் ஒட்டுமொத்த நிர்வாக கட்டுப்பாட்டில் இருந்து விலக்க முயற்சிகள் மேற்கொள்ள வேண்டும் என்றார்.

Advertisement




வாசகர் கருத்து (48)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
r.sundaram - tirunelveli,இந்தியா
14-ஆக-201920:07:22 IST Report Abuse
r.sundaram இதற்க்கு உதாரணம் போபார்ஸ் வழக்கு. சி பி ஐ எத்தனை குட்டிக்கரணங்கள் போட்டது.
Rate this:
Share this comment
Cancel
Endrum Indian - Kolkata,இந்தியா
14-ஆக-201917:08:49 IST Report Abuse
Endrum Indian எங்கள் செயல்பாடு சிதம்பர ஜாமீன், வழக்கு /தீர்ப்பு தள்ளி வைப்பு, வழக்கு இழுக்க இழுக்க இன்பம் இறுதிவரை ஒரு 20 வருடத்திற்கு???4.03 கோடி வழக்குகள் கோர்ட்டில்???ஏம்ப்பா இதெல்லாம் சரியா???
Rate this:
Share this comment
Cancel
sankar - new jersy,யூ.எஸ்.ஏ
14-ஆக-201915:40:10 IST Report Abuse
sankar நீதி மன்றத்தின் செயல்பாடு எப்புடி இருக்கு பாசு, சிதம்பரம் குடும்பம் வரிசையா ஜாமீன் வாங்குது
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X