பொது செய்தி

தமிழ்நாடு

எஸ்.எஸ்.ஐ.,க்களுக்கு 4 நாள் எழுத்து தேர்வு துவக்கம்

Added : ஆக 14, 2019
Share
Advertisement

கரூர்: திருச்சி மத்திய மண்டலத்தை சேர்ந்த, எஸ்.எஸ்.ஐ.,க்களுக்கு, - எஸ்.ஐ., பதவிக்கான சிறப்பு பயிற்சி முகாமில் எழுத்து தேர்வு, புதுக்கோட்டையில் நேற்று துவங்கியது. அதில், கரூர் மாவட்டத்தை சேர்ந்த, 16 எஸ்.எஸ்.ஐ.,க்கள் பங்கேற்றனர். தமிழக காவல் துறையில், கான்ஸ்டபிள் பணியில் சேர்ந்து, 25 ஆண்டுகள் பணிபுரிந்தவர்களுக்கு, எஸ்.எஸ்.ஐ., யாக பதவி உயர்வு வழங்கப்படுகிறது. பிறகு, அவர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டு, எஸ்.ஐ.,யாக பதவி உயர்வு அளிக்கப்படும். அதன்படி, மாநிலம் முழுவதும், 1,278 எஸ்.எஸ்.ஐ.,க்கள், பயிற்சிக்கு தேர்வு செய்யப்பட்டனர். அதில், திருச்சி மத்திய மண்டலத்தில், 130 எஸ்.எஸ்.ஐ.,க்கள் தேர்வு செய்யப்பட்டனர். அவர்களுக்கு புதுக்கோட்டை, தற்காலிக காவலர் பயிற்சி பள்ளியில் கடந்த ஜூன் மாதம், 24ல் பயிற்சி துவங்கியது. அவர்களுக்கு நான்கு நாட்களுக்கான எழுத்து தேர்வு நேற்று துவங்கியது. புதுக்கோட்டை எஸ்.பி., செல்வராஜ் துவக்கி வைத்தார். பயிற்சிக்கான துணை முதல்வர் டி.எஸ்.பி., சிவசுப்பிரமணியன், தலைமை சட்ட போதகர் அழகம்மாள் ஆகியோர் உடனிருந்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X