பொது செய்தி

இந்தியா

அபிநந்தனுக்கு நாளை வீர்சக்ரா விருது

Updated : ஆக 14, 2019 | Added : ஆக 14, 2019 | கருத்துகள் (26)
Share
Advertisement

புதுடில்லி : டில்லியில் நாளை (ஆக.,15) நடக்கும் சுதந்திர தின விழாவில் விங் கமாண்டர் அபிநந்தனுக்கு வீர்சக்ரா விருது வழங்கப்பட உள்ளது.



latest tamil news


பிப்., மாதம் இந்திய எல்லைக்குள் அத்துமீறி நுழைந்து தாக்குதல் நடத்த முயன்ற பாகிஸ்தானின் எப் 16 ரக விமானத்தை சுட்டு வீழ்த்திய விமானப்படை விங் கமாண்டர் அபிநந்தன் வர்த்தமானுக்கு ராணுவத்தின் 3வது உயரிய விருதான வீர் சக்ரா விருது வழங்கப்பட வாய்ப்புள்ளதாக கூறப்பட்டது. அதே போன்று பிப்.,27 அன்று பாக்., எல்லைக்குள் சென்று பாலகோட்டில் பயங்கரவாத முகாம்கள் மீது துல்லிய தாக்குதல் நடத்திய விமானப்படை வீரர்களுக்கு பதக்கங்கள் வழங்கப்பட உள்ளதாகவும் கூறப்பட்டது.


latest tamil news


இந்நிலையில் இன்று இவை உறுதி செய்யப்பட்டுள்ளன. டில்லியில் நாளை நடக்கும் நாட்டின் 73 வது சுதந்திர தின விழாவில் அபிநந்தனுக்கு வீர் சக்ரா விருதும், பாலகோட் தாக்குதலை தலைமை தாங்கி நடத்திய இந்திய விமானப்படை குழு தலைவர் மின்டி அகர்வாலுக்கு யுத் சேவா பதக்கமும் வழங்கப்பட உள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (26)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
15-ஆக-201902:12:47 IST Report Abuse
ஆப்பு இன்னும் கொஞ்சம் இவரை வெச்சு ஓட்டு வாங்கலாம்.
Rate this:
Cancel
blocked user - blocked,மயோட்
14-ஆக-201919:24:39 IST Report Abuse
blocked user அபிநந்தன் என்ற மாவீரனால் இந்த வீர்சக்ரா விருது பெருமை பெறப்போகிறது.
Rate this:
Cancel
KSK - Coimbatore,இந்தியா
14-ஆக-201919:24:33 IST Report Abuse
KSK சமீப காலமாக அதிகரித்து வரும் ஊழல், லஞ்சம்,பித்தலாட்ட நாத்திகம், போலி மதசார்பிமை, தேசவிரோத வன்முறை கும்பல்கள்... இத்யாதிகளால் பீடிக்கப்பட்ட தமிழகத்தை பெருமிதத்துடன் தலை நிமிர செய்த பாரத தாயின் தவப்புதல்வனின் வீரதீரத்துக்கும், எதிரி நாட்டு மீதான தாக்குதலில் உயிரை துச்சமாக கருதி, மிகுந்த சாதுர்யமாக செயல்பட்டு, சாகசம் செய்து, தாய்நாட்டுக்கு பெருமை சேர்த்த விஸ்வாசத்துக்கும் தரப்படும் இந்த உயர்ந்த கௌரவம் இந்தியாவை நேசிக்கும் அனைவரையும் மிக்க மகிழ்ச்சியுறவும், திருப்திகொள்ளவும் செய்கிறது. வாழ்க விமானப்படை மாவீரர் அபிநந்தன் வர்த்தமான் வளர்க பாரதம். வந்தே மாதரம், ஜெய் ஹிந்த்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X