பொது செய்தி

தமிழ்நாடு

காரிமங்கலம் சந்தையில் ரூ. 94 லட்சத்துக்கு மாடுகள் விற்பனை

Added : ஆக 14, 2019
Share
Advertisement

காரிமங்கலம்: காரிமங்கலம் வாரச்சந்தையில், 94 லட்சம் ரூபாய்க்கு மாடுகள் விற்பனையாகின. தர்மபுரி மாவட்டம், காரிமங்கலத்தில் நேற்று கூடிய சந்தையில், ஜெர்சி, சிந்து, நாட்டுமாடு, எருமைகளை விவசாயிகள் விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனர். ஜெர்சி மாடு, 18 ஆயிரம் முதல், 23 ஆயிரம் ரூபாய், சிந்து, 20 ஆயிரம் முதல், 33 ஆயிரம் ரூபாய், நாட்டுமாடு, 20 ஆயிரம் முதல், 34 ஆயிரம் ரூபாய், எருமை, 10 ஆயிரம் முதல், 18 ஆயிரம் ரூபாய் வரை விற்பனையானது. தமிழகம் மட்டுமின்றி கேரளா, கர்நாடகா மாநில வியாபாரிகளும், கால்நடைகளை மொத்தமாக வாங்கிச் சென்றனர். மொத்தம், 710 மாடுகளை வியாபாரிகள் விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனர். அதில், 600 மாடுகள் விற்பனையானதில், 94 லட்சம் ரூபாய்க்கு வர்த்தகம் நடந்தது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X