பொது செய்தி

தமிழ்நாடு

அரசு கொள்முதல் அறிவிப்பால் கொப்பரை தேங்காய் விலை உயர்வு

Added : ஆக 14, 2019
Share
Advertisement

ஈரோடு: ''அரசின் கொள்முதல் விலை அறிவிப்பால், கொப்பரை தேங்காய் விலை உயர்ந்துள்ளது,'' என, தமிழக விவசாயிகள் சங்க மாநில கவுரவ தலைவர் வெங்கடாசலம் தெரிவித்தார்.
கொப்பரை தேங்காய் விலை கடந்த ஜன., முதல் வாரம், ஈரோடு மாவட்டம், பெருந்துறை சொசைட்டி, அவல்பூந்துறை ஒழுங்கு முறை விற்பனை கூடத்தில் அதிகபட்சம், ஒரு கிலோ, 123 ரூபாய் வரை விலை போனது. பிப்., மாதம், 108, மார்ச்சில், 96 முதல், 103 ரூபாய், ஏப்., முதல், 95 ரூபாய்க்கு கீழ் குறைந்து, ஜூனில், 88 ரூபாய்க்கு கீழ் இறங்கியது. ஜூலை மாதத்தில், இதே நிலை காணப்பட்டது. இரண்டாம் தரம், 35 ரூபாய்க்கு வந்தது. ஜூலை, 12ல் சட்டசபையில், ஒரு கிலோ அரவை கொப்பரை தேங்காய், 95.21 ரூபாய், பந்து கொப்பரை, 99.20 ரூபாய்க்கு, 'நாபெட்' மூலம் அரசு கொள்முதல் செய்யும் என அறிவித்தனர். இதை தொடர்ந்து படிப்படியாக, சொசைட்டி, ஒழுங்கு முறை விற்பனை கூடங்கள், தனியார் மண்டிகளில் விலை உயரத்துவங்கி, கடந்த, 9ல் கிலோ, 100 ரூபாயை கடந்தது.

இதுகுறித்து தமிழக விவசாயிகள் சங்க மாநில கவுரவ தலைவர் வெங்கடாசலம் கூறியதாவது: கடந்தாண்டு நல்ல மழை பெய்ததால், தென்னை மீண்டும் உயிர் பிடித்தது. இந்தாண்டு விளைச்சல் நன்றாக உள்ளது. கேரளாவில், 1,000 தேங்காய், 32 ஆயிரம் ரூபாய் முதல், 37 ஆயிரம் ரூபாய், தமிழகத்தில், 25 ஆயிரம் ரூபாய் முதல், 27 ஆயிரம் ரூபாய், கர்நாடகாவில், 28 ஆயிரம் ரூபாய் முதல், 29 ஆயிரம் ரூபாய்க்கும் விற்கப்படுகிறது. பிராசஸ் செய்து, தரமான கொப்பரையாக கொண்டு வந்தால், ஈரப்பதம், சுருக்கம், வெடிப்பு, சில்லுகள் குறைந்திருந்தால், நல்ல விலை கிடைக்கிறது. பொதுவாக, ஜூன், ஜூலை, ஆக., செப்., மாதங்களில் அதிகமாக காய் வரத்தாகும். மழை, தண்ணீர் கிடைத்தால் மேலும், ஒரு மாதத்துக்கு காய் வரத்து நீடிக்கும். கொப்பரையாக மாற்றி, ஆறு மாதம் வரை வைத்திருந்து நல்ல விலையில் விற்கலாம். கடந்த மாதங்களில் விலை குறைந்தாலும், தற்போது, எண்ணெய் தேவை அதிகரித்து, அரசு கொள்முதல் விலை அறிவிப்பால், சொசைட்டி, ஒழுங்கு முறை விற்பனை கூடங்களில், கிலோ, 100 ரூபாயை கடந்துள்ளது. தீபாவளிக்கு முன், கிலோ, 120 ரூபாயை கடக்கும் என எதிர்பார்க்கிறோம். இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X