பொது செய்தி

தமிழ்நாடு

கொள்ளையரை விரட்டியடித்த தம்பதிக்கு சுதந்திர தின விழாவில் கவுரவம்

Added : ஆக 14, 2019 | கருத்துகள் (3)
Share
Advertisement
கொள்ளையரை விரட்டியடித்த தம்பதிக்கு சுதந்திர தின விழாவில் கவுரவம்

திருநெல்வேலி: கொள்ளையரை, தைரியமாக விரட்டியடித்த, முதிய தம்பதியை, சுதந்திர தினத்தன்று, திருநெல்வேலி கலெக்டர், ஷில்பா கவுரவிக்க உள்ளார்.

திருநெல்வேலி மாவட்டம், கடையம், கல்யாணிபுரத்தைச் சேர்ந்தவர், சண்முகவேல், 78; ஓய்வுபெற்ற மில் தொழிலாளி.இவர், ஊருக்கு வெளியே, எலுமிச்சை தோட்டத்துடன் உள்ள வீட்டில், மனைவி, செந்தாமரையுடன் வசித்து வருகிறார். அவர்களது மகன்கள், மகள் வெளியூர்களில் வசிக்கின்றனர்.முதிய தம்பதி தனியே இருப்பதையறிந்த கொள்ளையர், ஆக.,11ம் தேதி இரவில், அவர்களது வீட்டுக்குள் நுழைந்து, தம்பதியை தாக்கி, கொள்ளையடிக்க முயற்சித்தனர். கணவனும், மனைவியையும், அங்கு இருந்த நாற்காலிகள், செருப்பு, வாளியை துாக்கி வீசி, கொள்ளையரை விரட்டியடித்தனர்.

அவர்கள் வீட்டில் இருந்த, 'சிசிடிவி' கேமராவில், அந்த காட்சிகள் பதிவாகி இருந்தன. அந்த, 'வீடியோ' காட்சி, சமூகவலைத்தளங்களில் பரவியது.நேற்று, எஸ்.பி., அருண் சக்திகுமார், கடையம் சென்று, தம்பதியை சந்தித்து, தைரியமாக கொள்ளையரை விரட்டியதற்கும், முன்னெச்சரிக்கையாக, 'சிசிடிவி' கேமரா பொருத்தியதற்கும் பாராட்டு தெரிவித்தார். 'விரைவில், கொள்ளையரை கைது செய்வோம்' என, உறுதியளித்தார்.

இந்நிலையில், நாளை, திருநெல்வேலியில் நடக்கும், சுதந்திர தினவிழாவில், கலெக்டர், ஷில்பா, அந்த தம்பதியின் வீரத்தை பாராட்டி, கவுரவிக்க உள்ளார். முதிய தம்பதியின் வீரத்தை பாராட்டி, கிரிக்கெட் வீரர், ஹர்பஜன்சிங், நடிகர், அமிதாப்பச்சன் உள்பட, பலர், 'டுவிட்டர்' என்ற சமூகவலைதளத்தில், பாராட்டி, கருத்து தெரிவித்துள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
S A Sarma - Hyderabad,இந்தியா
17-ஆக-201918:21:53 IST Report Abuse
S A Sarma இவர்கள் முன்னிலையில் நாம் அனைவரும் ஒன்று சேர்ந்து, தமிழ்நாட்டை அறுபது வருடமாக கொள்ளை அடிக்கும் கும்பலை துரத்தி, விரட்டி அனுப்ப வேண்டும். பா ஜ க செயல்பட மிக நாட்கள் ஆகும் போல் தோன்றுகிறது. நீதிமன்றங்கள், கொள்ளையர்களுக்கு முன்ஜாமீன் கொடுக்கவே நேரம் சரியாக உள்ளது. இந்நிலையில், இவர்கள் முன்னிலையில் நாம் ஒன்று சேர்வோம்.
Rate this:
Cancel
sankar - HYDERABAD,இந்தியா
16-ஆக-201913:51:34 IST Report Abuse
sankar Hats off to the lady whos courage and bravery was stunning. Never giving up in front of a dangerous weapon and risking her life to save her husband. The intensity of the man when he composed himself is a great example of what bravery can do to one. Though the couples are physically at a disadvantageous position, its their will power and valor that saved them and also set an example of how the good MUST fight against the evil.
Rate this:
Cancel
15-ஆக-201909:17:12 IST Report Abuse
ருத்ரா இந்த முதியவர்களை பார்க்கும் போது உற்சாகமாக உள்ளது. அவர்கள் அனுபவம் அறவுரை சமயோஜிதம் இன்றைய இளைஞர்களுக்கு கண்டிப்பாக தேவை. பாராட்டுக்கள். கௌரவிக்கப் பட வேண்டியவர்கள் தான்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X