சம்பவம் செய்தி

தமிழ்நாடு

சூளகிரி அருகே மனைவி வெட்டிக்கொலை: கணவர் போலீசில் சரண்

Added : ஆக 14, 2019
Advertisement

ஓசூர்: சூளகிரி அருகே, மனைவியை கொலை செய்த கணவரை கைது செய்து, போலீசார் விசாரித்து வருகின்றனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரி அடுத்த பொன்னல்நத்தம் பகுதியை சேர்ந்தவர் முனிவெங்கடப்பா, 48. இவரது மனைவி சின்னம்மா தேவி, 40. இவர்களுக்கு மூன்று ஆண் மற்றும் இரு பெண் குழந்தைகள் உள்ளனர். மனைவியின் நடத்தையில் சந்தேகமடைந்த முனிவெங்கடப்பா, அடிக்கடி மனைவி சின்னம்மா தேவியுடன் தகராறு செய்து வந்தார். இந்நிலையில் நேற்று காலை தகராறு அதிகமாகவே, பீர்பள்ளி பகுதியில் உள்ள முருகன் என்பவரது மாந்தோட்டத்தில் வைத்து, தன் மனைவி சின்னம்மா தேவியை, தலை மற்றும் கையில் முனி வெங்கடப்பா வெட்டினார். இதில் படுகாயம் அடைந்த சின்னம்மா தேவி, சம்பவ இடத்திலேயே பலியானார். சூளகிரி போலீசார் சடலத்தை மீட்டு, ஓசூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் கொலை வழக்குப்பதிவு செய்து, தப்பியோடிய முனிவெங்கடப்பாவை தேடி வந்தனர். இதற்கிடையே கிருஷ்ணகிரி டி.எஸ்.பி., அலுவலகத்தில் முனிவெங்கடப்பா சரணடைந்தார். அவரை தனிப்படை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X