சம்பவம் செய்தி

தமிழ்நாடு

கள்ளத் தொடர்பு காரணமா? நூற்பாலை தொழிலாளி அரிவாளால் வெட்டி கொலை

Added : ஆக 14, 2019
Advertisement

குமாரபாளையம்: குமாரபாளையத்தில், நூற்பாலை தொழிலாளி அரிவாளால் வெட்டி கொலை செய்யப்பட்டார்.
நாமக்கல் மாவட்டம், குமாரபாளையம் ராகவேந்திரா வீதியில் உள்ள ஒரு வீட்டில், அரிவாளால் வெட்டப்பட்ட நிலையில் ஒருவரின் சடலம் இருப்பதாக, குமாரபாளையம் போலீசாருக்கு, நேற்று காலை தகவல் கிடைத்தது. விசாரணையில், ஈரோடு மாவட்டம், பவானி அருகே, குருப்ப நாயக்கன்பாளையத்தை சேர்ந்த கனகராஜ், 45, என, தெரிந்தது. மோப்ப நாய் சின்மா, ராகவேந்திரா சாலை, புத்தர் வீதி வழியாக காவிரி ஆற்றில் இறங்கி, பழைய காவிரி பாலம் வழியாக, நகராட்சி அலுவலக படித்துறை வரை வந்து திரும்பியது. கைரேகை நிபுணர்கள் ஆய்வு மேற்கொண்டனர். எஸ்.பி., அருளரசு சம்பவ இடத்தை ஆய்வு செய்து, குற்றவாளியை பிடிக்க, இரண்டு தனிப்படைகள் அமைத்து உத்தரவிட்டார்.

இதுகுறித்து, போலீசார் கூறியதாவது: தம்மண்ணன் வீதியில் உள்ள நூற்பாலையில் கனகராஜ் பணி புரிந்தார். அங்கு பணிபுரியும் தொழிலாளர்கள் சிலர் தங்குவதற்காக, ராகவேந்திரா வீதியில் உள்ள ஒரு வீட்டை ஆலை நிர்வாகத்தினர் ஏற்பாடு செய்துள்ளனர். கனகராஜ் அங்கு தங்கியிருந்தார். கனகராஜின் சொந்த ஊரை சேர்ந்த ஒரு பெண்ணும் அதே ஆலையில் பணிபுரிந்தார். இவருக்கும், கனகராஜுக்கும் கள்ளத்தொடர்பு இருந்துள்ளது. அதே பெண்ணை, வேறு தொழிலாளியும் விரும்பியுள்ளார். நேற்று முன்தினம், கனகராஜ் அறைக்கு அந்த பெண் வந்துள்ளார். அப்போது, கனகராஜூக்கும், அந்த தொழிலாளிக்கும் ஏற்பட்ட தகராறில், கனகராஜ் அரிவாளால் வெட்டப்பட்டு கொலை செய்யப்பட்டார். இந்த சண்டையில் அந்த தொழிலாளிக்கும் காயம் ஏற்பட்டு, வீதி வரை ரத்தம் சிந்தியிருந்தது. இதற்கிடையில், மற்றொரு அறையில் தங்கியிருந்த, பொள்ளாச்சியை சேர்ந்த தொழிலாளி அழகேசன், 42, என்பவரும் மாயமாகியுள்ளார். அவரையும் சந்தேகத்தின் பேரில் தேடி வருகிறோம். இவ்வாறு, அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X