பொது செய்தி

தமிழ்நாடு

ஆவினில் டீ, காபி, பால் விலை உயர்வு

Added : ஆக 14, 2019 | கருத்துகள் (1)
Advertisement

சேலம்: ஆவின் பொருட்களை விற்க, உரிமம் பெற்றுள்ள தனியார் மையங்களில், விலை உயர்வுக்கு அதிகாரிகள் பச்சைக்கொடி காட்டியதால், டீ, காபி, பால் விலை, இரண்டு ரூபாய் உயர்த்தப்பட்டுள்ளது. அதேநேரம், ஆவினின் நேரடி விற்பனை மையங்களில் விலை உயர்த்தப்படவில்லை.
தமிழகத்தில், ஆவின் பால் கொள்முதல், விற்பனை விலை, சட்டசபை கூட்டத்தொடர் முடிந்ததும் உயர்த்தப்படும் என, முதல்வர் பழனிசாமி, கடந்த மாதம், சட்டசபையில் அறிவித்தார். வேலூர் லோக்சபா தொகுதி தேர்தலால், அந்த அறிவிப்பை வெளியிடவில்லை. தற்போது, ஆவினில், பால் கொள்முதல் விலையில், லிட்டருக்கு இரண்டு ரூபாய், விற்பனை விலையில், லிட்டருக்கு, மூன்று ரூபாய் உயர்த்த, அரசு முடிவு செய்துள்ளதாக, அதிகாரிகள் தெரிவித்தனர். ஆனால், கூடுதலாக உயர்த்த, தமிழக பால் உற்பத்தியாளர் நலச்சங்க நிர்வாகிகள், முதல்வர் பழனிசாமியிடம் கோரிக்கை விடுத்தனர். அவர், இதுகுறித்து, அதிகாரிகளுடன் ஆலோசித்து வருகிறார்.

இந்நிலையில், ஆவின் உற்பத்தி பொருட்களை விற்க, உரிமம் பெற்றுள்ள தனியார் விற்பனை நிலையங்களில், விலை உயர்வை அமல்படுத்திக்கொள்ள, அதிகாரிகள் பச்சைக்கொடி காட்டிவிட்டனர். தற்போது, அந்த நிலையங்களில், டீ, காபி, பால், பாதாம் பால், சுக்கு பால், பில்டர் காபி ஆகியவற்றின் விலை, இரண்டு ரூபாய் உயர்த்தப்பட்டுள்ளது. ஆனால், ஆவினின் நேரடி விற்பனை மையங்களில் விலை உயர்த்தப்படவில்லை. அரசின் உத்தரவுக்காக காத்திருக்கின்றனர்.

அதிகாரிகள் கூறியதாவது: ஆவினில், பால் கொள்முதல், விற்பனை விலை உயர்வு, தற்போது விற்கப்படும் பொருட்களின் விலையை உயர்த்துவது குறித்த பட்டியல், அரசின் அனுமதிக்கு அனுப்பப்பட்டுள்ளது. அதன்படி, விலை உயர்வு, முதல்வர் அறிவித்ததும் அமல்படுத்தப்படும். அதற்கு முன், ஆவின் பொருட்களை விற்பனை செய்யும், தனியார் மையங்களுக்கு விலையை உயர்த்திக்கொள்ள வாய்மொழி அனுமதி வழங்கப்பட்டதால், அவர்கள், விலையை உயர்த்திவிட்டனர். இவ்வாறு அவர்கள் கூறினர்.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
14-ஆக-201911:06:08 IST Report Abuse
ஆப்பு அதென்ன வாய்மொழி உத்தரவு? பின்னாடி ஏதாவது ஏடா கூடமாயிட்டா நாங்க ஒண்ணுமே உத்தரவு போடலைன்னு டபாய்ய்க்க் வேண்டியது.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X