பொது செய்தி

தமிழ்நாடு

நீர்பிடிப்பு பகுதியில் மீண்டும் தொடங்கிய மழை: நாளை மேட்டூர் அணை நிரம்ப வாய்ப்பு

Added : ஆக 14, 2019
Advertisement

மேட்டூர்: நீர்பிடிப்பு பகுதியில், மீண்டும் தென்மேற்கு பருவமழை தொடங்கியுள்ளதால், காவிரியில் வெள்ளப்பெருக்கு நீடிக்க வாய்ப்புள்ளது. மேலும், மேட்டூர் அணை, நாளை நிரம்பும் என, எதிர்பார்க்கப்படுகிறது.
மேட்டூர் அணையின் மொத்த நீர்மட்டம், 120 அடி, கொள்ளளவு, 93.47 டி.எம்.சி., காவிரி நீர்பிடிப்பு பகுதியில், தீவிரமடைந்த பருவமழையால், கர்நாடகா அணைகள் நிரம்பின. உபரிநீர், மேட்டூர் அணைக்கு திறக்கப்பட்டது. இதனால், கடந்த, 9ல், 54 அடியாக இருந்த, மேட்டூர் அணை நீர்மட்டம், நேற்று மாலை, 105 அடி, நீர்இருப்பு, 72 டி.எம்.சி.,யாக உயர்ந்தது. நான்கு நாளில் மட்டும், அணை நீர்மட்டம், 51 அடி, நீர்இருப்பு, 52 டி.எம்.சி., அதிகரித்துள்ளது. நேற்று, அணைக்கு வினாடிக்கு, 2.20 லட்சம் கனஅடி நீர் வந்தது. வினாடிக்கு, 10 ஆயிரம் கனஅடி நீர், டெல்டா பாசனத்துக்கு திறக்கப்பட்டது. இதனால், மேட்டூர் அணை, சுரங்க மின் நிலையங்களில், 100 மெகாவாட், ஏழு கதவணை மின்நிலையங்களில், 84 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படும். அணை நிரம்ப, இன்னும், 21.5 டி.எம்.சி., நீர் மட்டுமே தேவை. தற்போதைய நிலவரப்படி, அணை நீர்இருப்பு, தினமும், 15 முதல், 20 டி.எம்.சி., அதிகரிப்பதால், நாளை, மேட்டூர் அணை நிரம்ப வாய்ப்புள்ளது. இரு நாளாக, காவிரி நீர்பிடிப்பு பகுதியில், மழை தீவிரம் குறைந்ததால், கர்நாடகாவின் கபினி, கே.ஆர்.எஸ்., அணைகளின் நீர்வரத்து, வினாடிக்கு, 1.30 லட்சம் கனஅடியாக சரிந்தது. இரு அணைகளிலிருந்தும், நேற்று சராசரியாக, வினாடிக்கு, 92 ஆயிரம் கனஅடி நீர், காவிரியில் திறக்கப்பட்டது. நேற்று, கே.ஆர்.எஸ்., அணை, முழு கொள்ளளவான, 124 அடியை எட்டியதால், வரும் நீரை, முழுமையாக காவிரியில் வெளியேற்ற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. இதனால், கே.ஆர்.எஸ்., அணை உபரிநீர் வெளியேற்றத்தால், காவிரி கரையோர பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு, வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டது. காவிரி நீர்பிடிப்பு பகுதியில், இரு நாளாக, மழை தீவிரம் குறைந்த நிலையில், நேற்று, மீண்டும் மழை தீவிரமடைந்தது. இதனால், காவிரியில் வெள்ளப்பெருக்கு நீடிக்க வாய்ப்புள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X