பொது செய்தி

தமிழ்நாடு

பரோலில் வந்த நளினி முருகனுடன் சந்திப்பு

Added : ஆக 14, 2019
Advertisement

வேலூர்: பரோலில் வந்த நளினி, முருகனை சந்தித்தார். முன்னாள் பிரதமர் ராஜிவ் கொலை வழக்கில், ஆயுள் தண்டனை பெற்ற நளினி, வேலூர் மகளிர் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். இதே வழக்கில், ஆயுள் தண்டனை பெற்ற அவரது கணவர் முருகன், வேலூர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். மகள் அரித்திரா திருமணத்திற்காக, சென்னை உயர்நீதிமன்ற உத்தரவுபடி கடந்த மாதம், 25ல், 30 நாட்கள் பரோலில் வெளியே வந்த நளினி, சத்துவாச்சாரியில் தங்கியுள்ளார். தினமும் அவர், சத்துவாச்சாரி போலீஸ் ஸ்டேஷனில் கையெழுத்திட்டு வருகிறார். சிறையில் இருக்கும் போது நளினி-முருகன் சந்திப்பு நடந்து வந்தது. பரோலில் வெளியே வந்ததால், பாதுகாப்பு காரணங்களால் இவர்கள் சந்திப்பு நடக்கவில்லை. இந்நிலையில், தன் மகள் திருமணம் குறித்து பேச வேண்டியிருப்பதால், தன் கணவர் முருகனுடன் சந்தித்து பேச, ஏற்பாடு செய்யும்படி சிறை அதிகாரிகளிடம் நளினி மனு கொடுத்தார். இதையடுத்து அதிகாரிகள் உத்தரவுபடி, நளினி-முருகன் சந்திப்பு நேற்று நடந்தது. பலத்த பாதுகாப்புடன் போலீசார், நளினியை சத்துவாச்சாரி போலீஸ் ஸ்டேஷனுக்கு நேற்று அழைத்து சென்றனர். அங்கு அவர் கையெழுத்திட்டதும், வேலூர் மத்திய ஆண்கள் சிறைக்கு அழைத்து சென்றனர். அங்கு காலை, 11:00 மணி முதல், 12:00 மணி வரை, நளினி-முருகன் சந்தித்து பேசினர். அப்போது மகள் அரித்திரா திருமணம் குறித்து, இருவரும் உருக்கமாக பேசிக் கொண்டதாக தெரிகிறது. சந்திப்பு முடிந்ததும், நளினியை சத்துவாச்சாரியில் அவர் தங்கியிருக்கும் வீட்டுக்கு போலீசார் அழைத்து சென்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X