சம்பவம் செய்தி

தமிழ்நாடு

கெமிக்கல் நிறுவனத்தில் விஷ வாயு தாக்கி ஒருவர் பலி

Added : ஆக 14, 2019
Advertisement

ராணிப்பேட்டை: கெமிக்கல் நிறுவனத்தில், விஷ வாயு தாக்கி, தொழிலாளி இறந்தார். வேலூர் மாவட்டம், ராணிப்பேட்டை சிப்காட்டில், 'அரி ஓம்' என்ற தனியார் மருந்து தயாரிக்கும் கெமிக்கல் நிறுவனம் உள்ளது. இதில், 40க்கும் மேற்பட்டவர்கள் பணிபுரிந்து வருகின்றனர். இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு, 11:00 மணிக்கு மருந்து தயாரிக்கும் குழாயை, ஐந்து தொழிலாளர்கள் சுத்தம் செய்து கொண்டிருந்தனர். அப்போது, குழாயில் இருந்து விஷவாயு வெளியேறியது. இதில், ஐந்து பேரும் மயக்கமடைந்து விழுந்தனர். அங்கிருந்தவர்கள், அவர்களை மீட்டு வாலாஜாபேட்டை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு பீஹார் மாநிலம், சிக்கந்தர்பூரை சேர்ந்த சுகேந்தர், 37, இறந்தார். மேலும் பூட்டுத்தாக்கு ராஜா, 38, ராணிப்பேட்டை சுரேந்தர், 39, சத்திரம் புதூர் உதயகுமார், 48, வாணாபாடியை சேர்ந்த மாரிமுத்து, 34, ஆகியோர் வேலூர் அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டனர். சிப்காட் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். வேலூர் மாவட்ட மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள், நிறுவனத்தில் ஆய்வு செய்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X