பொது செய்தி

தமிழ்நாடு

கோவை, நீலகிரியில் கனமழைக்கு வாய்ப்பு

Updated : ஆக 14, 2019 | Added : ஆக 14, 2019
Advertisement
rain, chennai metrological department, கோவை, நீலகிரி, தேனி, கனமழை, சென்னை வானிலை மையம்

சென்னை: நீலகிரி, கோவை, தேனி மாவட்டங்களில் மலைப்பகுதிகளில் ஒரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை மைய இயக்குனர் புவியரசன் கூறினார்.

மேலும் அவர், மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் கனமழை முதல் மிக கனமழை வரையிலும், தமிழகத்தின் தெற்கு மற்றும் உள் மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது.கடந்த 24 மணி நேரத்தில், அதிகபட்சமாக பெரம்பலூரில் 8 செ.மீ., வால்பாறையில் 7 செ.மீ., மழையும் பதிவாகியுள்ளது.






சென்னையில் வானம் ஒரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்சமாக 37 டிகிரி செல்சியஸ் வரையிலும், குறைந்தபட்சமாக 28 டிகிரி செல்சியஸ் வரையிலும் வெப்பநிலை பதிவாகக்கூடும். குமரி கடல் பகுதியில், மணிக்கு 40- 50 கி.மீ., வரை வீசக்கூடும். இதனால், அடுத்த 24 மணி நேரத்திற்கு குமரி கடல் பகுதிக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம். இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement




வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X