இந்தியா வளர்ந்த நாடு: டிரம்ப் கணிப்பு

Updated : ஆக 14, 2019 | Added : ஆக 14, 2019 | கருத்துகள் (33)
Advertisement
Donald Trump,India,Trump,China, Grown Economies,WTO Status, இந்தியா,டிரம்ப்,டோனால்ட் டிரம்ப்,

பென்சில்வேனியா: இந்தியாவும், சீனாவும் வளரும் நாடுகள் எனக்கூறிகொண்டு, உலக வர்த்தக மையத்தின் சலுகைகளை அனுபவித்து வருவதாகவும், இதனை அனுமதிக்க முடியாது என அமெரிக்க அதிபர் டிரம்ப் கூறியுள்ளார்.

பென்சில்வேனியாவில் நடந்த கூட்டத்தில் அவர் பேசியதாவது: ஆசியாவின் இரண்டு பெரிய பொருளாதார நாடுகளான இந்தியா, சீனா ஆகியவை இனியும் வளரும் நாடுகள் அல்ல. அதனை கூறிக்கொண்டு, உலக வர்த்தக மையத்தின் சலுகைகளை அனுபவிக்கக் கூடாது. ஆனால், இரண்டு நாடுகளும், வளரும் நாடுகள் எனக்கூறிக்கொண்டு, சலுகைகளை அனுபவித்து வருகின்றன. இதனை பல ஆண்டுகளாக தொடர்ந்து செய்து வருகின்றன.






உலக வர்த்தக மையம், அமெரிக்காவை சமமாக நடத்த வேண்டும். இந்தியா, சீனாவை வளர்ந்த நாடுகளாக பார்க்க வேண்டும். இந்த இரண்டு நாடுகளும் உலக வர்த்தக மையத்தின் சலுகைகளை அனுபவிப்பதை அமெரிக்கா அனுமதிக்காது. இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement




வாசகர் கருத்து (33)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
spr - chennai,இந்தியா
15-ஆக-201901:48:30 IST Report Abuse
spr இந்த நினைப்பு இந்த நாட்டு மக்களுக்கு, மக்களின் தலைவர்களாக முயலும் பலருக்கும், வரட்டும். இந்த நாட்டில் அதிகாரிகள் லஞ்சம் வாங்காமல், முறையாக நிர்வாகம் செய்ய முயன்றால், சுயநல அரசியல்வியாதிகள் சற்று ஓய்வெடுத்துக் கொண்டால், நம் நாடு முன்னேறிய நாடே ஆனால் இன்னமும் பல வகையிலும் மான்யம் சலுகை இட ஒதுக்கீடு, வாக்களிக்க துட்டு என எதிர்பார்க்கும் மக்களும் மாறி, தன்மானத்துடன் பிழைக்க முயற்சி செய்தால், சுயநலமாக அவர்களை மூளைச்சலவை செய்யும் அரசியல் கழிசடைகளும் ஒழிந்தால் இந்த நாடு பல முன்னேறிய நாடுகளுக்கு உதவி முடியும் பங்குச் சந்தை முதலீடு நாட்டின் வளமல்ல தொழிற்சாலைகள் அதிகரித்து, உற்பத்தித் திறன் அதிகரித்து, இறக்குமதி குறைந்து ஏற்றுமதி அதிகரித்தால் மட்டுமே நாம் முன்னேற முடியும். அதற்கு உதவும் அரசுக்கு நாம் உதவ வேண்டும் குறைகள், நன்மைகள் என இருந்தாலும் "குணம் நாடிக்குற்றமும் நாடி அவற்றுள் மிகை நாடி மிக்கக் கொளல் என்ற வகையில்அதில் எது அதிகம் " ஒட்டு மொத்த சமுதாயமும் பலன் பெரும் எனப் பார்த்து அரசினைப் பாராட்ட வேண்டும்
Rate this:
Share this comment
Cancel
Sathyanarayanan Subramanian - Tambaram,இந்தியா
14-ஆக-201922:01:01 IST Report Abuse
Sathyanarayanan Subramanian இந்தியா வளரும் நாடு. இன்னும் வளரும். கவலை வேண்டாம் டிரம்ப் அவர்களே.
Rate this:
Share this comment
Cancel
RAJAS - chennai,இந்தியா
14-ஆக-201920:41:20 IST Report Abuse
RAJAS ரங்கராஜன் கமிட்டி கொடுத்த அறிக்கையின் படி இந்தியாவில் 36 .3 கோடி பேர் வறுமை கோட்டிற்கு கீழே இருக்கின்றனர். அதாவது ஒரு நாளைக்கு 47 ரூபாய் கூட (நகரத்தில் 47 கிராமத்தில் 32 ) வருமானம் ஈட்ட முடியாத சூழல். கிட்டத்தட்ட 35 கோடி பேர் ஒரு வேளை உணவு இல்லாமல் உறங்க செல்கின்றனர். எங்கள் அரசியல்வாதிகள் வாழ்க்கையை வைத்து மக்களை எடை போட கூடாது.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X