கோர்ட் செய்தி

தமிழ்நாடு

அத்திவரதர் தரிசனம் நீட்டிப்பு: உத்தரவிட ஐகோர்ட் மறுப்பு

Updated : ஆக 14, 2019 | Added : ஆக 14, 2019 | கருத்துகள் (29)
Advertisement
athivaradhar, அத்திவரதர், அத்திவரதர் தரிசனம், சென்னை ஐகோர்ட், தமிழக அரசு,

சென்னை: அத்திவரதர் தரிசனத்தை நீட்டிக்க உத்தரவிட முடியாது எனவும், இது பற்றி அரசு தான் முடிவெடுக்க வேண்டும் எனவும் சென்னை ஐகோர்ட் கூறியுள்ளது.

காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில் நடக்கும் அத்திவரதர் தரிசனத்தை மேலும் 10 நாட்கள் நீட்டிக்க உத்தரவிட வேண்டும் என ஸ்ரீவைஸ்ணவ ராமானுஜ சாம்ராஜ்ய சபா தலைவர் கோவிந்த ராமானுஜ தாசர் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். அவர் தனது மனுவில், அத்திவரதர் தரிசனத்தை மேலும் 10 நாட்கள் நீட்டிக்க போவதாக முதல்வர் கூறியதாக கூறியிருந்தார்.


இந்த வழக்கு சென்னை ஐகோர்ட்டில் விசாரணைக்கு வந்த போது, அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், அத்திவரதர் தரிசனத்தை மேலும் 48 நாட்கள் நீட்டிக்க முடியாது. தரிசனத்தை நீட்டிக்க போவது இல்லை என அமைச்சர் கூறியுள்ளார் எனக்கூறினார்.

இதனையடுத்து, கோர்ட் பிறப்பித்த உத்தரவு: அத்திவரதர் தரிசனத்தை மேலும், நீட்டிக்க உத்தரவிட முடியாது. தரிசனத்தை நீட்டிப்பது குறித்து அரசும், அறநிலையத்துறையும் தான் முடிவெடுக்க வேண்டும் என உத்தரவிட்டது.

Advertisement
வாசகர் கருத்து (29)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
K.P SARATHI - chennai,இந்தியா
19-ஆக-201915:32:10 IST Report Abuse
K.P  SARATHI இது ஆன்மிகம் சம்பவம் அதனால் நீதி மன்றம் தலையிடாது ஆனால் இதே நீதி மன்றம் சபரிமலை ஆன்மிகத்தில் எப்படி தலையிட்டது.
Rate this:
Share this comment
Cancel
Palanisamy Sekar - Jurong-West,சிங்கப்பூர்
14-ஆக-201919:41:39 IST Report Abuse
Palanisamy Sekar இதுவரை சந்திக்கத்தவர்களின் நிலைமையை அரசு உணரவேண்டும். இதில் எந்த ஆன்மீக தவறும் இருக்க முடியாது. இறுதியாக சொல்வது என்னவென்றால்..எந்த பக்தர்கள் வரிசையில் நின்று கஷ்டப்பட்டு அத்திவரதரை சந்தித்தார்களோ அவர்களுக்கு மட்டும்தான் அத்திவரதரின் அருள் கிட்டும்..பணம் கொடுத்து பார்த்தவர்கள்..ரெக்கமென்டேஷன் கடித்ததோடு ஓசி தரிசனம் பார்த்தவர்களுக்கு பாவம்தான் கிட்டும். மக்களை தடுத்துவிட்டு ஸ்பெஷல் தரிசனம் பார்த்தவர்களுக்கு சரி பாவம்தான் வந்து சேரும்..இவையாவும் நடக்க வேண்டாம் என்றால்..இந்த அரசாங்கம் தரிசன காலத்தை நீட்டிக்க வேண்டும்..அப்படி செய்யாமல் போனால்..அது அரசுக்கும் மந்திரிக்கும் பெரிய பாவச்சுமையை அவர்கள் சுமக்க நேரிடும்..இந்த சாபம் இதுவரை பார்க்க இயலாத என்போன்ரின் சாபமாகும். சொவ்லதை சொல்லிவிட்டேன்..அப்புறம் உங்கள் இஷ்டம்..கஷ்டத்தை அனுபவிப்பீர்கள்..செவிசாயுங்கள்..இல்லையேல்..
Rate this:
Share this comment
முதல் தமிழன் - தமிழ் நாடு,இந்தியா
14-ஆக-201921:00:00 IST Report Abuse
முதல் தமிழன்எப்ப பாரு புத்திசாலி மாதிரி ஆக்ட் உட்டுக்கின்னு......
Rate this:
Share this comment
Sanny - sydney,ஆஸ்திரேலியா
15-ஆக-201906:04:55 IST Report Abuse
Sanny அவர் சொல்வது சரிதான் முதல் தமிழா, ரெக்கமண்டேஷன், பணம்கொடுத்து வரிசையில் நிக்காது தரிசனம் செய்பவர்களுக்கு கடவுளின் அனுக்கிரகம் கிடைக்காது, அரசியல்வாதிகளின் அனுக்கிரகம் மட்டும் தான் கிடைக்கும்....
Rate this:
Share this comment
Cancel
Sundararaman Iyer - Bangalore,இந்தியா
14-ஆக-201919:33:56 IST Report Abuse
Sundararaman Iyer No one wants to ask the opinion of Aththi Vardar on this issue???
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X