பொது செய்தி

இந்தியா

காஷ்மீர் வளர்ச்சி பெறும்: பிரதமர் உறுதி

Updated : ஆக 14, 2019 | Added : ஆக 14, 2019 | கருத்துகள் (16)
Share
Advertisement
புதுடில்லி: காஷ்மீரில் சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்டதன் மூலம், அந்த மாநிலத்திற்கு பல தொழில் வாய்ப்புகள் கிடைக்கும். மாநிலம் வளர்ச்சி பெறும் என பிரதமர் மோடி கூறியுள்ளார்.ஆக்கப்பூர்வமான தொடர்இது தொடர்பாக செய்தி நிறுவனம் ஒன்றுக்கு பிரதமர் மோடி அளித்த பேட்டியில் கூறியதாவது: பதவியேற்ற 75 நாளில், மத்திய அரசு ஏராளமான பணிகளை செய்துள்ளது. குழந்தைகள் பாதுகாப்பு
kashmir, Pm Modi, காஷ்மீர், பிரதமர் மோடி

புதுடில்லி: காஷ்மீரில் சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்டதன் மூலம், அந்த மாநிலத்திற்கு பல தொழில் வாய்ப்புகள் கிடைக்கும். மாநிலம் வளர்ச்சி பெறும் என பிரதமர் மோடி கூறியுள்ளார்.


ஆக்கப்பூர்வமான தொடர்இது தொடர்பாக செய்தி நிறுவனம் ஒன்றுக்கு பிரதமர் மோடி அளித்த பேட்டியில் கூறியதாவது:
பதவியேற்ற 75 நாளில், மத்திய அரசு ஏராளமான பணிகளை செய்துள்ளது. குழந்தைகள் பாதுகாப்பு முதல் சந்திராயன் 2 விண்கலம் வரை, ஊழலுக்கு எதிரான நடவடிக்கை முதல், முத்தலாக் மசோதா வரை என, பல நடவடிக்கைகளை நாங்கள் எடுத்துள்ளோம்.
சுத்தமான குடிநீர் சப்ளை மற்றும் நீர் சேமிப்பு குறித்து, விரைவாக நடவடிக்கை எடுக்க ஜலசக்தி அமைச்சகத்தை உருவாக்கியுள்ளோம்.கடந்த 5 ஆண்டுகளில் நூற்றுக்கணக்கான சீர்திருத்தங்களை மத்திய அரசு செய்துள்ளது. இதன் மூலம், மக்களின் எதிர்பார்ப்புப்படி நாடு வளர்ச்சி பெறும். 17 வது லோக்சபாவின் முதலாவது அமர்வு சாதனை படைத்துள்ளது. 1952க்கு பிறகு, ஆக்கப்பூர்வமான தொடராக அமைந்துள்ளது.
இது சிறிய சாதனை அல்ல. மக்களின் எதிர்பார்ப்புப்படி, பார்லிமென்ட் பொறுப்பு உள்ளதாக மாற்றும் முக்கியமான திருப்பம் என்பது எனது கருத்து. விவசாயிகள் மற்றும் வர்த்தகர்களுக்கு பென்சன், தேசிய மருத்துவ ஆணைய மசோதா, தொழிலாளர் சீர்திருத்த மசோதா உள்ளிட்ட பல முக்கிய மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.


மருத்துவ துறையில் சீர்திருத்தம்கடந்த 2014 ல் நாங்கள் மத்தியில் ஆட்சியில் அமைத்த போது, மருத்துவ கல்வியில் பல பிரச்னைகள் இருந்தன. மருத்துவ கவுன்சில் ஊழல் நிறைந்த அமைப்பாக இருந்ததாக கோர்ட்கள் தெரிவித்திருந்தன. மோசமான நிர்வாகம், வெளிப்படை தன்மை இல்லை என்பது பார்லிமென்ட் குழு ஆய்வு மூலம் தெரியவந்தது.

மருத்துவ துறையில் முந்தைய அரசுகளும் சீர்திருத்தம் செய்ய நினைத்தன. ஆனால், நடவடிக்கை ஏதும் எடுக்கவில்லை. இந்த விஷயம் சாதாரண விஷயம் அல்ல. நமது மக்களின் நலன் மற்றும் இளைஞர்களின் எதிர்காலத்துடன் தொடர்பு உள்ளதால், நாங்கள் சீர்திருத்த நடவடிக்கைகளை தொடர்ந்தோம். இதற்காக குழுவை அமைத்தோம். அந்த குழு, மருத்துவ துறையில் உள்ள பிரச்னைகளை ஆய்வு செய்தது.

இந்த குழுவின் பரிந்துரை அடிப்படையில், மருத்துவ துறையில் சீர்திருத்தம் கொண்டு வரும் மசோதா நிறைவேற்றப்பட்டது. தேசிய மருத்துவ ஆணையம், ஊழலை ஒழித்து வெளிப்படை தன்மையை கொண்டு வரும். மருத்துவ படிப்பில், வெளிப்படைத்தன்மை, பொறுப்பு, மற்றும் நிர்வாகத்தில் திறமையை இந்த தேசிய மருத்துவ ஆணையம் கொண்டு வரும். மாணவர்களின் சுமையை குறைத்து, மருத்துவ சீட்களை அதிகரிப்பதுடன், மருத்துவ கல்விக்கான செலவை குறைப்பதே இதன் லட்சியம்.


latest tamil news

ஊழலுக்கு எதிராக நடவடிக்கைநாடு சுதந்திரம் பெற்றது முதல், ஊழல் பெரிய பிரச்னையாக இருந்தது. பொது மக்கள் சில கட்டாயங்கள், சில பிரச்னைகள் காரணமாக அதனை சகித்து வந்தனர். ஆனால், ஊழலை முடிவுக்கு கொண்டு வர வேண்டும் என விரும்பினர். ஊழலுக்கு எதிராக போராட்டத்தை யார் துவக்குவார்கள் என்ற கேள்வி மக்களின் மனதில் இருந்தது.
ஊழலுக்கு எதிரான போராட்டத்திற்கு மக்கள் மற்றும் மீடியாக்களின் ஆதரவு எப்போதும் இருந்தது. நாட்டின் வளர்ச்சிக்கு ஊழல் முட்டுகட்டையாக இருந்தது என்பதை அனைவரும் ஒப்புக்கொண்டனர். இதனால், நாங்கள் ஆட்சி அமைத்தது முதல் ஊழலுக்கு எதிரான நடவடிக்கை எடுப்பது என முடிவு செய்தோம்.அரசியல் பாதிப்புகளை பற்றி கவலைப்படாமல், நடவடிக்கை தொடங்கினோம். இதற்கான பலன்கள் தெரிய துவங்கியுள்ளது. ஊழல் குறைய துவங்கியதுடன், சமூகத்தில் நம்பகத்தன்மை அதிகரித்துள்ளது.

கடந்த 5 ஆண்டுகளில் வருமான வரி செலுத்துவோர் எண்ணிக்கை இருமடங்காக அதிகரித்துள்ளது. ஊழலை ஒழித்ததுடன், ஆன்லைன் மூலம் வருமான வரி செலுத்துவதற்கான நடவடிக்கை எடுத்துள்ளோம். ஊழல் செய்ய மாட்டோம். யாரையும் அனுமதிக்க மாட்டோம் என உறுதி பூண்டோம். இதன்படி, நாங்கள் நடவடிக்கை எடுத்தோம். சில அதிகாரிகளை கட்டாய ஒய்வில் அனுப்பினோம். கடந்த ஆட்சியிலும் இவ்வாறு நூற்றுக்கணக்கான அதிகாரிகளை அனுப்பியுள்ளோம். தொழில்நுட்பம் பயன்படுத்தி, நேரடி மானிய திட்டம மூலம்,அரசுக்கு ரூ.1.4 லட்சம் கோடி மிச்சப்படுத்தினோம்


மக்களுக்கு அநீதிஜம்மு காஷ்மீரை யூனியன் பிரதேசங்களாகப் பிரிப்பது, சிறப்பு அந்தஸ்து வழங்கும் சட்டப்பிரிவு நீக்கத்தை காட்டிலும் பெரிய முடிவு ஒன்று இருக்க முடியாது.காஷ்மீர் சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்யப்பட்டதை எதிர்ப்பவர்களை கவனித்து பார்க்கவேண்டும். சில சட்டவிரோத அமைப்புகள், வாரிசு அரசியல்வாதிகள், எதிர்க்கட்சிகளில் சிலர், பயங்கரவாதிகள் மீது கருணை கொண்டவர்கள் மட்டுமே எதிர்க்கின்றனர்.
காஷ்மீரில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகளை, அரசியலை தாண்டி நாட்டு மக்கள் வரவேற்கின்றனர். இது நாட்டு நலனுக்காக எடுக்கப்பட்ட நடவடிக்கை. அரசியலுக்காக அல்ல. கடந்த காலங்களில் சாத்தியம் இல்லாத, கடினமான , ஆனால், அவசியமான முடிவு தற்போது சாத்தியமாகியுள்ளதை மக்கள் பார்க்கின்றனர். 370 மற்றும் 35(ஏ) சட்டப்பிரிவு எவ்வாறு காஷ்மீர், லடாக்கை தனிமைபடுத்தியது என்பதை தெளிவாக பார்க்கின்றனர்.

இந்த சட்டப்பிரிவுகள் மக்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றவில்லை. வளர்ச்சியின் பலன்களை அம்மாநில மக்கள் பெறவில்லை. வருமானமும் அதிகரிக்கவில்லை. தற்போது, நாங்கள் காஷ்மீர் வளர்ச்சி பெற வாய்ப்பு வழங்கியுள்ளோம். ஜம்மு, காஷ்மீர், லடாக்கை சேர்ந்த எனது சகோதரர்கள், சகோதரிகள், சிறப்பான எதிர்காலத்தை எதிர்பார்த்தனர். 370வது சட்டப்பிரிவு இதனை வழங்கவில்லை. பெண்கள் மற்றும் குழந்தைகள், தாழ்த்தப்பட்டவர்கள், பழங்குடியினருக்கு எதிராக அநீதிகள் இழைக்கப்பட்டன.

தற்போது ஸ்டார்ட் அப் நிறுவனஙகள், உணவு பதப்படுத்துதல், சுற்றுலா என பல தொழில்கள் அங்கு கிடைக்கும். இதனால், உள்ளூர் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு பெருகும். கல்வி மற்றும் தனிநபர் பயிற்சிகள் அதிகரிக்கும். உள்ளூர் மக்களின் விருப்பம் லட்சியப்படி, ஜம்மு, காஷ்மீர், லடாக் ஆகியவை வளர்ச்சி பெறும் என நான் உறுதி அளிக்கிறேன். 370 மற்றும் 35(ஏ) ஆகியவை மக்களை சங்கிலியில் கட்டி வைத்திருந்தன. தற்போது அது உடைக்கப்பட்டது.


மக்கள் துணைகாஷ்மீர் சிறப்பு அந்தஸ்தை நீக்கியதை எதிர்ப்பவர்களுக்கு ஒரு கேள்வி கேட்கிறேன். இந்த அந்தஸ்து தொடர வேண்டும் என்பதற்கு உங்களிடம் உள்ள காரணம் என்ன? இதற்கு அவர்களிடம் பதில் கிடையாது. சாமான்ய மக்களுக்கு பலன் கிடைக்கும் நடவடிக்கைகளை அவர்கள் எதிர்த்து வந்தனர். மக்களுக்கு குடிநீர் கிடைக்கும் திட்டம் கொண்டு வந்தால், அதனை எதிர்த்து போராட்டம் நடத்தினர். ரயில்வே பாதைகள் அமைத்திருக்கலாம். அதனை எதிர்த்தும் போராடினர். பயங்கரவாதிகளுக்கும், மாவோயிஸ்ட்களுக்காகவும் அவர்களின் இதயம் துடித்தது. இன்று, ஜம்மு, காஷ்மீர் மற்றும் லடாக் மக்களுக்காக , நாட்டு மக்கள் அனைவரும் துணையாக நிற்கின்றனர். அந்த பிராந்திய வளர்ச்சி பெற மக்கள் துணையாக இருப்பார்கள் என நம்புகிறேன். இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement
வாசகர் கருத்து (16)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
ராமநாதன் நாகப்பன் ஆமாம், அம்பானி காஷ்மீரில் முதலீடு பண்ண விருப்பம் என்று சொல்லியிருக்கிறார்.
Rate this:
Cancel
15-ஆக-201902:11:22 IST Report Abuse
ஆப்பு ஸ்ரீநகரில் ராக்கெட் ஏவுதளம், ஜம்முவில் ஐ.டி காரிடார், உரியில் உருக்காலை, புல்வாமாவில் ஏவுகணை தயாரிப்பு, குல்மார்க்கில் குங்குமப்பூ தொழிற்சாலை, அமர்நாத்தில் அல்வா, அட்டாரியில் சுப்ரீம் கோர்ட் - எல்லாத்திலேயும் உறுதியா இருக்கோம்.
Rate this:
Cancel
balakrishnan - Mangaf,குவைத்
14-ஆக-201920:13:21 IST Report Abuse
balakrishnan மோடி அரசு நாட்டை சரியான வழி இல் எடுத்து சென்றுகொண்டிருக்கிறது .திரு ரஜினிகாந்த் அவர்கள் சொன்னதை போன்று.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X