பொது செய்தி

தமிழ்நாடு

அத்திவரதர் தரிசனம்: பின் பிரசவம்

Updated : ஆக 14, 2019 | Added : ஆக 14, 2019 | கருத்துகள் (10)
Advertisement
அத்திவரதர், பெண், பிரசவம், அத்திவரதா

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயிலில், அத்திவரதரை தரிசித்த கர்ப்பிணிக்கு சிறிது நேரத்தில் ஆண் குழந்தை பிறந்தது. குழந்தைக்கு அத்திவரதா என பெயர் சூட்டப்பட்டது.

காஞ்சி வரதராஜ பெருமாள் கோவில் குளத்தில் இருந்து 40 ஆண்டுகளுக்கு பின் அத்திவரதர் சிலை எடுக்கப்பட்டு ஜூலை 1 முதல் 48 நாட்கள் பக்தர்கள் தரிசனத்துக்காக வைக்கப்பட்டுள்ளது. தினசரி லட்சக்கணக்கில் பக்தர்கள் வருகின்றனர். ஆக.,17ம் தேதி கோவில் குளத்துக்குள் அத்திவரதர் சிலை மீண்டும் வைக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அத்திவரதரை தரிசிக்க இன்னும் இரண்டு நாட்களே உள்ளதால், மக்கள் கூட்டம் அதிகமாக உள்ளது.

இந்நிலையில், அத்திவதர் தரிசனத்திற்கு விஜயா என்ற கர்ப்பிணி சென்றுள்ளார். கர்ப்பிணிகளுக்கான சிறப்பு வரிசையில் தரிசனம் செய்துவிட்டு, வெளியேவரும் போது, விஜயாவுக்கு பிரசவ வலி ஏற்பட்டுள்ளது. உடனடியாக கோயில் வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள மருத்துவ முகாமில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு ஆண்குழந்தை பிறந்துள்ளது. தாயும், குழந்தையும் நலமாக உள்ளதாக டாக்டர்கள் கூறியுள்ளனர். பிறந்த குழந்தைக்கு 'அத்திவரதா' என பெயர் சூட்டப்பட்டது.


இதன் இடையே, நிருபர்களை சந்தித்த காஞ்சிபுரம் கலெக்டர் பொன்னையா கூறியதாவது: அத்திவரதரை தரிசிக்க ஏராளமான பக்தர்கள் வருவதால், தரிசனத்தை மாற்ற முடிவு செய்யப்பட்டு உள்ளது. கிழக்கு கோபுர வாசல் நாளை (ஆக.,15) பிற்பகல் 12 மணிக்கு மூடப்படும். 4 மணிக்கு கருட சேவை துவங்கி 8 மணிக்கு நிறைவு பெறும். மீண்டும் கோயில் கதவு திறக்கப்பட்டு, பக்தர்கள் அத்திவரதர் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள். நாளை பிற்பகல் 12 மணியுடன் விஐபி தரிசனம் நிறைவு பெறும். நாளை மறுநாள் விஐபி தரிசனம் கிடையாது. 17 ம் தேதி அன்று, ஆறுகால பூஜை நடத்தப்படும். ஆகம விதிகளின்படி, அத்திவரதர் ஆனந்தசரஸ் குளத்தில் வைக்கப்படுவார். அனைத்து துறை ஊழியர்களும் அர்ப்பணிப்பு உணர்வுடன் பணியாற்றி வருகின்றனர். பாதுகாப்பு பணியில் போலீசாரின் பங்களிப்பு முக்கியமானது. போக்குவரத்து வசதிகளும் முறையாக செய்து கொடுக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement
வாசகர் கருத்து (10)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
LAX - Trichy,இந்தியா
15-ஆக-201903:54:48 IST Report Abuse
LAX வாழ்த்துக்கள்.. நல்ல பிள்ளையாக வளர்ந்து நல்ல பெயர் எடுக்கட்டும்..
Rate this:
Share this comment
Cancel
Indhuindian - Chennai,இந்தியா
14-ஆக-201920:57:12 IST Report Abuse
Indhuindian Thank God nothing untoward happened. Now turn to the authorities controlling the crowd. How did the policemen allowed her inside the temple in that unruly jostling crowd.
Rate this:
Share this comment
Cancel
S.Ganesan - Hosur,இந்தியா
14-ஆக-201919:18:00 IST Report Abuse
S.Ganesan வாழ்க வளமுடன்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X