மொபைல் போன் பறித்த காதல் ஜோடி கைது| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

மொபைல் போன் பறித்த காதல் ஜோடி கைது

Added : ஆக 14, 2019 | கருத்துகள் (1)
Share

சென்னை: சென்னை தேனாம்பேட்டையை சேர்ந்தவர் பிரசன்னா லிப்சா. நேற்று(ஆக.,13) மாலை தோழியுடன் ஜிஎன் செட்டி சாலையில் நடந்து சென்றார். அப்து, டூவிலரில் பெண் ஒருவருடன் வந்த நபர், லிப்சா வைத்திருந்த மொபைல்போனை பறித்து சென்றார். இது குறித்து போலீசில் புகார் அளிக்கப்பட்டது. சம்பவ இடத்தில் உள்ள சிசிடிவி கேமராவைஆய்வு செய்தனர். திருடர்கள் சென்ற வாகன பதிவெண்ணை வைத்து போலீசார் ஆராய்ந்ததில், அந்த வாகனம் திருட்டு வாகனம் என தெரியவந்தது. தொடர்ந்து நடத்திய விசாரணையில் இருவரையும் போலீசார் கைது செய்தனர். விசாரணையில், திருடன், சூளைமேட்டை சேர்ந்த ராஜூ என்பதும், பின்னால் அமர்ந்திருந்த பெண், கரூரை சேர்ந்த சுவாதி எனவும் தெரியவந்தது. கல்லூரியில் படித்து வருவதும், இருவரும் காதலித்து வருவதும் தெரியவந்துள்ளது.

Advertisement




We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X