புதுடில்லி: கனமழை, வெள்ளம் காரணமாக 6 மாநிலங்களில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 270 ஆக அதிகரித்துள்ளது. 10 லட்சம் பேர் நிவாரண முகாமகளில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

கனமழை காரணமாக, கேரளா, கர்நாடகா, மஹாராஷ்டிரா, குஜராத் போன்ற மாநிலங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. வெள்ளத்தினால், ஆயிரகணக்கான ஹெக்டேர் பரப்பளவு பயிர்கள் நாசமாகியுள்ளன. சாலை மற்றும் ரயில் போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது.

கேரளாவில் ஏற்பட்ட மழை வெள்ளம் காரணமாக உயிரிழந்தோரின் எண்ணிக்கை 102 ஆக அதிகரித்துள்ளது. இன்னும் 50 பேரை காணவில்லை. அவர்களை தேடும் பணி நடந்து வருகிறது. 1.9 லட்சம் பேர் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். வெள்ள நீர் வடிய துவங்கியதை தொடர்ந்து மக்கள் வீடுகளுக்கு திரும்பி வருவதாக முதல்வர் விஜயன் கூறியுள்ளார்.


கர்நாடகாவில், 54 பேர் உயிரிழந்துள்ளனர். 15 பேர் காயமடைந்துள்ளனர். அணைகள் நிரம்பியதை தொடர்ந்து, திறக்கப்பட்டன. இதனால், கரையோரங்களில் வசித்த மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். 7 லட்சம் பேர் மீட்கப்பட்டு நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டனர்.
மஹாராஷ்டிராவில் மழை வெள்ளத்திற்கு 48 பேர் உயிரிழந்துள்ளனர். வெள்ள நீர் வடிய துவங்கியுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும், மின்சாரம் மற்றும் குடிநீர் வழங்க நடவடிக்கை எடுத்து வருவதாக தெரிவித்துள்ளனர்.
ம.பி., மாநிலத்தில், கனமழைக்கு 32 பேர் உயிரிழந்துள்ளனர். சோயாபீன்கள் கடுமையாக சேதமடைந்துள்ளது.
குஜராத்திலும் மழை வெள்ளம் தொடர்பான சம்பவத்தில் 31 பேர் உயிரிழந்தனர். உத்தர்கண்ட் மாநிலத்தில் மழை காரணமாக நிலச்சரிவு ஏற்பட்டதில் பலர் உயிரிழந்தனர்
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE