மோடி, அமித் ஷாவின் ராஜதந்திரம்: ரஜினிகாந்த்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

மோடி, அமித் ஷாவின் ராஜதந்திரம்: ரஜினிகாந்த்

Updated : ஆக 14, 2019 | Added : ஆக 14, 2019 | கருத்துகள் (46)
Share

சென்னை: காஷ்மீர் விவகாரத்தை பிரதமர் மோடியும், அமித் ஷாவும் ராஜதந்திரத்துடன் கையாண்டதாக நடிகர் ரஜினிகாந்த் பாராட்டு தெரிவித்துள்ளார்.



latest tamil news



இதுகுறித்து செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: காஷ்மீர் விவகாரம் நாட்டின் பாதுகாப்புடன் தொடர்புடையது. காஷ்மீர், இந்தியாவிற்குள் பயங்கரவாதிகள் ஊடுருவ ஏதுவாகவும், தாய்வீடாகவும் இருந்தது. எனவே இந்த விவகாரத்தை ராஜதந்திரத்துடன் அமித் ஷா, மோடி கையாண்டுள்ளனர். முதலில் ராஜ்யசபாவில் நிறைவேற்றப்பட்டு பின்னர் பார்லிக்கு கொண்டு வந்தனர்.

மோடியையும், அமித்ஷாவையும், கிருஷ்ணன், அர்ஜுனனுக்கு இணையாக கூறப்பட்டது குறித்து கேட்டதற்கு, 'கிருஷ்ணன் யோசனை வழங்குபவர், அர்ஜுனன் அதை செயல்படுத்துபவர் . காஷ்மீர் விவகாரத்தில் இருவரும் ராஜதந்திரத்துடன் செயல்பட்டதால் அவ்வாறு கூறினேன். எதை அரசியல் ஆக்க கூடாது; எதை அரசியல் ஆக்க வேண்டும் என்பதை சில மரியாதைக்குரிய அரசியல்வாதிகள் புரிந்து கொள்ள வேண்டும். தமிழ் திரைப்படங்களுக்கு தேசிய விருதுகள் கிடைக்காமல் போனது வருத்தம் அளிக்கிறது' என்றார்


latest tamil news



கட்சி அறிவிப்பு குறித்தும், தமிழக அரசியல் மையமாக போயஸ் கார்டன் வருமா என்பது குறித்தும் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு, பொறுத்திருந்து பாருங்கள் என அவர் கூறினார்.

Advertisement




We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X