தியாகிகளுக்கு வீரவணக்கம்: ஜனாதிபதி சுதந்திர தின வாழ்த்து

Updated : ஆக 14, 2019 | Added : ஆக 14, 2019
Advertisement

புதுடில்லி : 73வது சுதந்திர தினத்தை கொண்டாடும் நாட்டு மக்களுக்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.






இதுகுறித்து அவர் தனது உரையில் கூறியுள்ளதாவது: ஒரு சுதந்திர தேசமாக 72 வருடங்களை முடித்துவிட்டோம். தற்போது 73வது சுதந்திர தினத்தை கொண்டாட உள்ளோம். இந்நேரத்தில் நாட்டின் விடுதலைக்காக உயிரை தியாகம் செய்த அனைவருக்கும் வணக்கம் செலுத்துகிறோம். இன்னும் சில நாட்களில் அக்.,2ல், நமது தேச விடுதலைக்காக பாடுபட்ட மகாத்மா காந்தியின் 150வது பிறந்த நாளைக் கொண்டாட உள்ளோம். நாம் என்றும் காந்தியின் அகிம்சை வழியில் பயணிக்கிறோம்.

சீக்கியர்களின் மதகுருவான குருநானக் தேவ்வின் 550வது பிறந்தநாள் கொண்டாடப்படவுள்ளது. அவர் கோட்பாடுகள் எல்லா மதத்தினரும் பின்பற்றும் வகையில் பொதுவானதாக உள்ளது. ஜம்மு காஷ்மீர் மற்றும் லடாக்கில் நிகழ்ந்த மாற்றங்கள் அப்பகுதி மக்களுக்கு மிகுந்த பயனிக்கும் வகையில் உள்ளது.





மத்திய அரசு கொண்டு வந்த மாற்றங்களால், நாட்டின் பிற பகுதி மக்களை போலவே, ஜம்மு காஷ்மீர் மக்களும் சமஉரிமை, சலுகைகளை பெறுவார்கள். 370வது சட்டப்பிரிவு நீக்கப்பட்டதன் மூலம் காஷ்மீர் மக்களுக்கு கல்வி உரிமை, இடஒதுக்கீடு கிடைக்கும். பார்லி., கூட்டத் தொடரில் முத்தலாக் தடுப்புச் சட்டம் நிறைவேற்றப்பட்டது சிறப்பானதாகும்.

நாட்டுமக்களின் வாழ்வாதாரத்தை முன்னேற்றுவதற்கு மத்திய அரசு பல அடிப்படை வசதிகளை வழங்குகிறது. 'வாழு; வாழ விடு' என்ற கொள்கையை இந்திய சமூகம் பின்பற்றி வருகிறது. நாட்டு மக்கள் அனைவருக்கும் சுதந்திர தின நல்வாழ்த்துக்கள். இவ்வாறு அவர் தனது உரையில் தெரிவித்துள்ளார்.

Advertisement




வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X