உரியில் பயங்கரவாதிகள் தாக்குதல் முறியடிப்பு| Dinamalar

பொது செய்தி

இந்தியா

உரியில் பயங்கரவாதிகள் தாக்குதல் முறியடிப்பு

Updated : ஆக 14, 2019 | Added : ஆக 14, 2019 | கருத்துகள் (4)
Share

ஸ்ரீநகர்: காஷ்மீரின் உரி பகுதியில் பயங்கரவாதிகள் ஊடுறுவல் முயற்சி முறியடிக்கப்பட்டதாக இந்திய ராணுவம் தெரிவித்துள்ளது.



latest tamil news



73வது சுதந்திர தினம் நாளை(ஆக.,15) கொண்டாடப்பட உள்ள நிலையில், நாடு முழுவதும் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன. காஷ்மீருக்கு வழங்கப்பட்ட சிறப்பு அதிகாரம் சமீபத்தில் ரத்து செய்யப்பட்டுள்ள நிலையில், அங்கு அசம்பாவிதங்கள் எதுவும் நடக்காதவாறு, ராணுவம் உஷார் படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில், காஷ்மீரில் நேற்று பயங்கரவாதிகள் தாக்குதல் முயற்சி முறியடிக்கப்பட்டுள்ளதாக இந்திய ராணுவம் தெரிவித்துள்ளது.


latest tamil news



இதுகுறித்து வெளியான தகவல்: காஷ்மீரின் உரி பகுதியில், பாக்., ராணுவம் ஆதரவு பெற்ற பயங்கரவாத குழுக்களின் ஊடுறுவல் முயற்சியை இந்திய ராணுவம் முறியடித்துள்ளது. பயங்கரவாதிகள் ஊடுருவிச் செல்ல, இந்திய நிலைகள் மீது பாக்., ராணுவம் பயங்கர துப்பாக்கிச்சூடு நடத்தியது. காஷ்மீரில் வன்முறையை ஏற்படுத்துவதற்காக பயங்கரவாத குழுக்களை ஊடுருவச் செய்ய பாக்., முயற்சிக்கிறது. பாக்., தரப்பில் இருந்து வரும் அச்சுறுத்தலை சமாளிக்க தயார் நிலையில் உள்ளோம். இவ்வாறு இந்திய ராணுவம் தெரிவித்துள்ளது.

Advertisement




We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X