பொது செய்தி

தமிழ்நாடு

உயர்ந்தது அபராதம்; போக்குவரத்து துறை எச்சரிக்கை

Updated : ஆக 14, 2019 | Added : ஆக 14, 2019 | கருத்துகள் (18)
Advertisement

சென்னை: போக்குவரத்து விதிமுறைகளை மீறுபவர்களுக்கு அபராதத் தொகை அதிகரிக்கப்பட்டுள்ளது. இப்புதிய அபராத தொகை சென்னையில் அமல்படுத்தப்படுகிறது.


சாலை போக்குவரத்துக்கான கடுமையான விதிமுறைகளுடன் கூடிய, மோட்டார் வாகன சட்ட திருத்த மசோதா, சமீபத்தில் பார்லிமென்டில் நிறைவேற்றப்பட்ட நிலையில், அதற்கு ஜனாதிபதி ஒப்புதலும் அளித்தார். இந்நிலையில், விதிகளை மீறும் வாகன ஓட்டிகளுக்கு அபராதம் அதிகரிக்கப்பட்டுள்ளதாக போக்குவரத்து போலீசார் அறிவித்துள்ளனர். அபராதம் குறைவாக இருப்பதால் விதிமீறலில் ஈடுபடுவோர் மத்தியில் தாக்கத்தை ஏற்படுத்தவில்லை என தெரிவித்துள்ள போக்குவரத்து போலீசார், தமிழகத்தில் சென்னையில் முதலில் இது அமல்படுத்தப்படுவதாக தெரிவித்துள்ளனர்.


புதிய அபராதம்:* சாலைகளில் அதிவேகமாக பைக் ரேஸில் ஈடுபட்டால், ரூ.5 ஆயிரம் அபராதம்

* மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டினால், ரூ.10 ஆயிரம் அபராதம்

* பர்மிட் இல்லாமல் வாகனம் ஓட்டினால் ரூ.10 ஆயிரம் அபராதம்

* பைக்கில் அதிகம் பேர் சென்றால், ரூ.2 ஆயிரம் அபராதம்; டிரைவிங் லைசன்ஸ் 3 மாதங்களுக்கு தகுதி இழப்பு

* ஹெல்மெட் அணியாமல் வாகனம் ஓட்டினால் ரூ.1000 அபராதம்; டிரைவிங் லைசன்ஸ் 3 மாதங்களுக்கு தகுதி இழப்பு

* காரில் சீட் பெல்ட் அணியாமல் ஓட்டினால், ரூ.1000 அபராதம்

* டிரைவிங் லைசன்ஸ் இல்லாமல் வாகனம் ஓட்டினால் ரூ.5 ஆயிரம் அபராதம் (முன்பு ரூ.500)

* டிரைவிங் லைசன்ஸ் தகுதி இழப்புக்கு பின்பும் வாகனம் ஓட்டினால் ரூ.10 ஆயிரம் அபராதம்

* போக்குவரத்து விதிமுறைகளுக்கான பொது அபராதம் ரூ.500 (முன்பு ரூ.100)

* சாலை ஒழுங்குமுறை விதிகளை மீறுதலுக்கு ரூ.500 அபராதம் (முன்பு ரூ.100)

Advertisement
வாசகர் கருத்து (18)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
15-ஆக-201912:03:00 IST Report Abuse
Ranjith Rajan ELLAM TRAFFIC POLICE ADHIGAMA LANJAM VAANGUVAN NU SOLRANGALE THAVIRA INIME HELMET PODUVEN, SAALAI VIDHIGALAI MADHIPPEN, ROAD SAFETY KADAIPIDIPPEN NU ORUTHANAVADHU SOLRANA PAARU.
Rate this:
Share this comment
Cancel
Sri,India - India,இந்தியா
15-ஆக-201911:39:57 IST Report Abuse
 Sri,India மது குடித்து விட்டு வாகனம் ஓட்டினால் அபராதம் ......நல்ல joke. டாஸ்மாக் போதை கடையின் முன் வாகனத்தை எடுப்பவர்கள் எல்லாம் காந்திஜி புகழ் பரப்பி விட்ட வந்தா வண்டியை எடுக்கிறார்கள்?? குடிகார வாகன ஓட்டியை விரட்டி சென்று பிடிப்பதற்கு பதிலாக அங்கேயே சென்று போலீசு அபராதம் விதிக்குமா?? தெருவிற்கு தெரு நின்று அப்பாவிகளிடம் ஊதச் சொல்லுவதற்கு பதிலாக அங்கேயே நின்று அபராதம் விதிக்க முடியுமா??
Rate this:
Share this comment
Cancel
venkat - chennai,இந்தியா
15-ஆக-201911:37:21 IST Report Abuse
venkat அமெரிக்காவில் இருப்பது போல சில முக்கிய சாலை விதிகளை தமிழக போக்குவரத்து காவல், நெடுஞ்சாலை, உள்ளாட்சி அமைப்புகள் லஞ்ச ஊழல் மாமூல் ஓசி டீ பரோட்டாவுக்காக மக்களை விரைந்து செல்லும் வாகனங்களுக்குடையே தள்ளி காவு கொடுக்காமல் அமுல் படுத்தவேண்டும். இவ்விதிகளை யாரும் youtube -ல் யாரும் எளிதில் பார்க்கலாம். (A) அமெரிக்கா சாலை அமைப்பு > (1 ) சாலைகள் அகலமாக தரமாக, பல ஓடுபாதைகளுடன் இருக்கும் (2) ஓடுபாதையில் கடைசிவரை எந்த குறுக்கீடும் இராது, பேருந்து நிறுத்தம் போல விலகி ஓரமாய் நிற்க தனி இடம் கோடிட்டிருக்கும். அக்கோட்டிற்குள்தான் நிற்கும் வண்டிகள் நிற்கும். (3 ) . வலது புறம் செல்ல நடு தடுப்பு புல்வெளி குறுக்கி, நேராக செல்லும் வண்டிகளுக்கு இடையூறு இன்றி ஓடு பாதை பிரிக்கப் பட்டு இருக்கும். (4 ) சேலம், சென்னை போன்று எல்லா நகரங்களையும் இணைத்து சிக்னல் இல்லா விரைவு வழி விரைவுப்பாதைகள் நூற்றுக்கணக்கில் உள்ளன. (5 ) வலது இடது செல்ல பக்கவாட்டில் தனி சாலை, நேர் சாலைக்கு இடையூறு இன்றி மேலே உயரமாக கிராஸ் செய்யும். (6 ) எண்ணற்ற உயர்மட்ட வழிகள், குறுக்குப் பாதைகள் குறித்த காலத்தில் விரைந்து அமைக்கப் படுகின்றன . (7 ) சேவை இணைப்புகள் சாலை ஓரம் தனி வழியில் அமைக்கப் பட்டு இருக்கும்.மின்சாரம், குடிநீர், சாக்கடை, கேபிள் என்று மாற்றி மாற்றி ஓடும் சாலையை தோண்டமாட்டார்கள். (8 ) சாலை ஓரங்களில் அழகு மரங்கள், புல்வெளிகள், பூச்செடிகள் அமைக்கப்பட்டு இருக்கும். (9) நெடுஞ்சாலைகளில் அடுத்த இடம், திருப்பம் பெரிதாக ஒவ்வொரு ஓடுபாதை மேலும் தெளிவாக உயரத்தில் அறிவிப்பு பலகை இருக்கும். (10 ) நெடுஞ்சாலைகளில், பிரிவு சாலைகள் எண்களில் குறிப்பிடப்படும் (EXIT 101 , 102 , ..) . கூகிள் வழிகாட்டி திரும்ப வேண்டிய பாதை எத்தனை பிரிவு பாதைகள் கடந்து என்று சுலபமாக சொல்லும். அதற்கு ஏற்ப நடுசாலையில் இருந்து ஓரப்பாதைக்கு மெதுவாக மாறிக்கொள்ளலாம். (B ) ஓடுபாதை, நிறுத்தக்கோடு > (1 ) சாலைகளில் ஓடுபாதை (lane ) தெளிவாக கோடிட்டிருக்கும். (2 ) விமான நிலையம், கடைத்தெரு போன்ற பல இடங்களில் பல அடுக்கு வாகன நிறுத்தம் பல இருக்கும். வண்டியை விட்டு விமானத்தில் கூட சென்று வரலாம் சாலைகளில் வாகன நிறுத்த நெரிசல் இருக்காது. (3 ) இருசக்கர வண்டி செல்ல தனி ஓடுபாதைகள் குறிக்கப் பட்டு இருக்கும். (C ) சிக்னல், திருப்பங்கள்> (1) சாலையோர கம்பத்தில் இருந்து சாலை நடு வரை கம்பம் நீட்டி ) ஒவ்வொரு ஓடு பாதையிலும் நேராக, வலது, இடம் செல்ல தனித்தனி சிக்னல் விளக்கு இருக்கும் (2 ) டோல்கேட் நில்லாமல் செல்லலாம், வண்டி எண் தானாக பதிவாகும், ஒருவாரத்திற்குள் இணையத்தில் டோல் கட்டணம் செலுத்தலாம் (3 ) எல்லா சாலை சந்திப்புகளிலும் எல்லா ஓடுபாதைக்கும் தனியே சிக்னல் இருக்கும். (D ) ஓட்டும் விதம் > (1) சிவப்பு விளக்கில் எல்லா வண்டிகளும் நில் குறுக்கு கோட்டுக்கு முன் கண்டிப்பாக நிற்கும். (2 ) ஓடுபாதைகளில் விதிக்கப்பட்ட வேகத்துக்குள்தான் விரைவார் (3 ) ஓடுபாதை மாறுமுன் பின்னோக்கி கண்ணாடி பார்த்து, பக்க விளக்கு போட்டு மாறுவர் (4 ) நாடு முழுதும் மால் போன்ற இடங்களில் வண்டிகள் நிற்க வரைந்த கோட்டுக்குள்தான் நிற்பார். (5) வண்டிகளில் ஓவர் லோடு அதிக பயணி இராது. லாரிகள் மூடி இருக்கும். ஓட்டுநர் ஓய்வெடுக்க லாரியில், மற்றும் அங்கங்கு தூய்மையான ஓய்விட வசதி உண்டு. (6 ) வண்டிகள் ஒன்றன் பின் ஒன்று இடைவெளி விட்டு அணிவகுத்து விரைந்து செல்லும் (7 ) எல்லோரும் சீட் பெல்ட் அணிவர். (8 ) குழந்தைகளுக்கு தனி கூடை இருக்கை கட்டாயம் (E ) தூய, துணிவு, கடமை உணர்வு அதிகாரிகள் > (1 ) சாலையின் குறுக்கே காவலர் தடை ஏற்படுத்தி, நின்று, கவனிக்க சொல்லி, கம்பு வீசி காயம் ஏற்படுத்த மாட்டார். எங்கிருந்தோ எல்லா விதி மீறல்களையும் கண்காணித்து, விரைந்து வந்து, ஓரம் நிறுத்தி, சீருடை கமெரா மூலம் சாட்சியம் ஏற்படுத்தி விஞ்ஞான முறையில் கேஸ் போடுவார். (2 ) சாலை ஓர, நடை பாதைகளில் எவ்வித கடை, சிலை, கோவில், பதாகை, கொடி, ஆக்கிரமிப்பும் இருக்காது. (3 ) சாலையில் மாடுகள் திரியாது, படுக்காது, மூத்திரம் போகாது (4 ) உரிமம் முதல், ஓட்டுவது வரை சரி பார்க்க காவல், அதிகாரிகள் லஞ்சம், மாமூல் வாங்குவதில்லை, விதிகளை மட்டுமே வற்புறுத்துவார். (5) அமெரிக்காவில் வணிகர்கள் இங்குபோல மரத்தை வெட்டி நடைபாதை ஆக்கிரமித்து, பொருள் பரப்பி, குப்பை சாக்கடை கழிவை சாலையில் விட்டு, கண்காணிப்பு அதிகாரிகள் கவனிக்காமல் கவனிக்க ஓசி பரோட்டா பரிமாற மாட்டார்கள். அதிகாரிகளும் கடைநிலை கருப்பு ஆடுகளும் அங்கு இவ்வாறு சட்டவிதி மீற கை கண்ணசைக்க, பாராமுகமாய் இருக்க, நடவடிக்கை எடுக்காமல் இருக்க கையேந்த மாட்டார்கள். மேற்கூறிய பல சட்ட விதிகளும் அமெரிக்காவில் துல்லியமாக காவல் நீதித்துறையில் செவ்வனே பார பட்சம் இன்றி கண்காணிக்கப்படுகிறது இங்கு சென்னை, சுற்றத்தில் நடக்கும் சில மக்கள் விரோத கடமை தவறும் காவல் போக்குவரத்து நெடுஞ்சாலை உள்ளாட்சி சுகாதாரத்துறை அதிகாரிகள் மாமூல் வாங்கும் ரவுடிகளால், அனுமதிக்கப் படுகின்றது. இதனால், வண்டிகள் நடுத்தெருவில் ஓடுபாதையில் நிறுத்தப்படுகின்றன. மக்கள், பள்ளி செல்லும் மாணவ மாணவியர், சாலையோரமாக மறைந்த நடைபாதையில் நடக்க முடியாமல், விரைந்து செல்லும் வண்டிகள் அருகே நடுச்சாலையில் நடந்து விபத்துக்குள்ளாகின்றனர். இத்தகு விபத்து ஏற்படும் சில இடங்களின் உதாரணம்: > (a ) சிறுசேரி IT பார்க் OMR வாசல் முனை இருந்து SBI ATM டோமினோ வரை சாலை ஓரத்தில் இருந்து 50 அடி வரை OMR சாலை பெரும் பகுதியும் மறித்து பீப்பாய்கள் அடுக்கிய பழைய பேப்பர் கடை, அருகில் பல சாலையோர ஆக்கிரமிப்பு உணவகங்கள் பாதசாரிகளின் விபத்துக்கு காரணிகள். (b ) சிறுசேரி SIPCOT வாசல் அருகே சாலையை ஆக்கிரமித்து உணவு பெட்டி கடைகளால் சிபிகாட் செல்லும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் திரும்ப இடமின்றி வரிசை கட்டி நிற்கின்றன. (c ) OMR சிறுசேரி சிபிகாட் சிக்னல் ஒட்டி சாலை பள்ளம் குண்டு குழியாய் மக்களை காவு வாங்க காத்திருக்கிறது. (d ) இதேபோன்ற, நாவலூர் மார்க்கெட் சேவை ரோடு ஆக்கிரமிப்பு OMR ஓடு பாதையில் வண்டிகளை நிறுத்தி போக்குவரத்துக்கு இடைஞ்சல் ஏற்படுத்துகிறது. (e ) நாவலூர் ஜங்ஷன் முனை தாழம்பூர் குண்டுகுழி சாலை ஆக்கிரமிப்பு, போக்குவரத்து நெரிசல் ஏற்படுத்தி, மக்களை சாலையில் நடக்க வைக்கிறது. (e ) சோழிங்கநல்லூர் பெரும்பாக்கம் மெயின் ரோடு முதல் மேடவாக்கம் சந்திப்பு வரை நடைபாதை ஆக்கிரமிப்பால் அதிக வண்டிகள் செல்லும் இப்பாதையில் அடிக்கடி போக்குவரத்து நெரிசல், மக்கள், பள்ளி சிறுவர்கள், நடுச்சாலையில் சென்று விபத்துக்குள்ளாகும் நிலை. (f ) குரோம்பேட்டை மற்றும் சோழிங்கநல்லூர் சரவணா ஸ்டார் திறந்தவுடனேயே அருகே சேவை வண்டி சாலைகளில் ஆக்கிரமிப்பு, இது பற்றி பத்திரிக்கை, பொது நல வழக்குகள் மூலமும் அறிந்தும், பெரிய வண்டியில் சாலையில் தினமும் இந்த சட்ட மீறலை பார்த்தும் பாராது போகும் காவல் நீதி நெடுஞ்சாலைத் துறையினர், உச்ச நீதி மன்ற "நடை பாதை for passing repassing " உத்தரவு பட்டப் பகலில் கண்ணெதிரே மீறப்பட்டு மக்கள் போக்கு வரத்து நெரிசலில் அடிபடும் ஆபத்து நிலையை கண்டும் காணாது கடமை மறந்து செல்கின்றனர். எந்த நடவடிக்கையும் எடுப்பதில்லை. இது பட்டப்பகல் சட்டவிதி மீறலை ஊக்குவிப்பதாகவே தோன்றுகிறது. விபத்துகள் தானாக நடப்பதில்லை. அலட்சிய ஊழல் அதிகாரிகளால் உருவாக்கப்படுகிறது.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X