துறைமுக லயன்ஸ் சங்க நிர்வாகிகள் பதவியேற்பு| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

துறைமுக லயன்ஸ் சங்க நிர்வாகிகள் பதவியேற்பு

Added : ஆக 14, 2019
Share
 துறைமுக லயன்ஸ் சங்க நிர்வாகிகள் பதவியேற்பு

கடலுார்: கடலுார் துறைமுக லயன்ஸ் சங்கத்தின் புதிய நிர்வாகிகள் பதவியேற்பு விழா மற்றும் வெள்ளி விழா ஆண்டு நிறைவு விழா நடந்தது.சங்கத் தலைவர் பாலகுமரன் தலைமை தங்கினார். புதிய பொறுப்பாளர்களை முருகப்பன் பதவியில் அமர்த்தினார். சுரேஷ் நீலகண்டன், சங்கத்தில் இணைந்தனர்.கல்யாண்குமார் சங்கத்தின் முன்னாள் தலைவர்களுக்கு நினைவு பரிசு வழங்கினார். விஜயலட்சுமி சிவக்குமார் வெள்ளிவிழா ஆண்டு சின்னத்தை அறிமுகம் செய்து வைத்தார். சங்கத்தின் புதிய தலைவர் ரமேஷ் பிரபாகர் ஏற்புரை வழங்கினார்.விழா ஏற்பாடுகளை சங்கத்தின் புதிய செயலாளர் தேவநாதன், பொருளாளர் செந்தில்குமார் ஆகியோர் செய்திருந்தனர். விழாவில் மண்டலத்தலைவர் ராஜா, வட்டாரத்தலைவர் கமலநாதன் மற்றும் சங்க உறுப்பினர்கள் பங்கேற்றனர்.நிகழ்ச்சியில் புதிய தலைவர் 100 மாணவர்களுக்கு புத்தகப் பைகள் வழங்கினார். குருநாதன் ரூ. 5 ஆயிரம் கல்வி உதவித்தொகை வழங்கினார்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X