சம்பவம் செய்தி

தமிழ்நாடு

தாசில்தார் முன்னிலையில் ஆக்கிரமிப்பு அகற்றம்

Added : ஆக 14, 2019
Share
Advertisement

புவனகிரி: புவனகிரி அருகே குளம் ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணி தாசில்தார் முன்னிலையில் நேற்று துவங்கியது.புவனகிரி பேரூராட்சி, ஆதிவராகநத்தத்தில் (பெருமாத்துார்) ஏழு ஏக்கர் பரப்பில் பொது மக்கள் பயன்படுத்தும் இலுப்பை குளம் உள்ளது. இதனை அப்பகுதியைச் சேர்ந்த சிலர் ஆக்கிரமித்தனர். அவர்கள் குளத்தை துார் வாரி ஆழப்படுத்த எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் குளம் நாளுக்கு நாள் துார்ந்து வந்தது.இது குறித்து அப்பகுதி மக்களின் புகாரை அடுத்து, ஆக்கிரமிப்புகளை அகற்றி, குளத்தை ஆழப்படுத்த வருவாய்த்துறை அதிகாரிகளுக்கு கலெக்டர் அன்புச்செல்வன் உத்தரவிட்டார்.புவனகிரி ஐ.சி.ஐ.சி.ஐ., வங்கி நிர்வாகம் குளத்தை துார்வாரி ஆழப்படுத்த முன்வந்தது. இதையடுத்த தாசில்தார் சத்தியன் உள்ளிட்ட அதிகாரிகள் குளத்தை அளவீடு செய்து, ஆக்கிரமிப்பாளர்களுக்கு கெடு விதித்தனர்.கெடு முடிந்த நிலையில் ஆக்கிரமிப்பாளர்கள் அலட்சியம் காட்டியதால், பேரூராட்சி நிர்வாகம் தண்டோரா மூலம் அறிவித்தனர். ஆக்கிரமிப்பாளர்கள் செவி மடுக்காததால், தாசில்தார் சத்தியன், துணை தாசில்தார் சந்திரன், செயல் அலுவலர் திருஞானசம்பந்தம் உள்ளிட்ட வருவாய்த்துறை அதிகாரிகள், பேரூராட்சி ஊழியர்களுடன் சென்று ஆக்கிரமிப்புகளை நேற்று அகற்றினர். முற்றிலும் ஆக்கிரமிப்புகள் அகற்றியதும், குளம் ஆழப்படுத்தி பாதுகாக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X