சம்பவம் செய்தி

தமிழ்நாடு

மா.கம்யூ., ஆர்ப்பாட்டம்

Added : ஆக 14, 2019
Share
Advertisement

மங்கலம்பேட்டை: மங்கலம்பேட்டை அடுத்த ஆலடியில் மா. கம்யூ., சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.தலைவர் மாரிமுத்து தலைமை தாங்கினார். மாவட்ட செயற்குழு திருஅரசு, வட்ட செயலர் அசோகன், கிளை செயலர் கணேசன் முன்னிலை வகித்தனர்.வட்டக்குழு உறுப்பினர்கள் சந்திரசேகரன், ஜீவானந்தம், சிவானந்தம், குமரகுரு, அமிர்தலிங்கம், கலைச்செல்வன், கிளை செயலர்கள் வேலன், வீரன் மதியழகன், உதயகுமார் உட்பட பலர் பங்கேற்றனர்.ஆர்ப்பாட்டத்தில், புலியூர், பாலக்கொல்லை ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு பணிக்கு வராத மருத்துவர்கள், செவிலியர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆலடி பகுதியில் கூழாங்கற்கள் கடத்துபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். பலக்கொல்லை ஊராட்சி, களர்குப்பத்தில் கசிவுநீர் குட்டை, பெரிய ஏரி ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் உட்பட பல கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X