பொது செய்தி

தமிழ்நாடு

எம்.பட்டி மோதல் விவகாரம்: சமாதான கூட்டத்தில் தீர்வு

Added : ஆக 14, 2019
Share
Advertisement

விருத்தாசலம்: விருத்தாசலம் அருகே இருதரப்பினர் இடையே ஏற்பட்ட மோதல் விவகாரம், சமாதான கூட்டத்தில் தீர்த்து வைக்கப்பட்டது.விருத்தாசலம் அடுத்த எம்.பட்டி காலனியை சேர்ந்தவர் கணேசன் மகன் அஜித், 20. கடந்த சில நாட்களுக்கு முன், உறவினர் ஒருவருடன் பைக்கில் சென்றபோது, அவரை மற்றொரு தரப்பினர் திட்டி, தாக்கினர். இது தொடர்பாக, இரு தரப்பு புகார்களின் பேரில், எட்டு பேர் மீது மங்கலம்பேட்டை போலீசார் வழக்குப் பதிவு செய்தனர். இருப்பினும், இருதரப்பு மோதல் தொடர்பாக, கிராமத்தில் சட்டம் ஒழுங்கு பிரச்னை ஏற்படும் அபாயம் நிலவியது.அதைத் தொடர்ந்து, விருத்தாசலம் தாசில்தார் கவியரசு தலைமையில், சமாதான கூட்டம் நேற்று நடந்தது. இருதரப்பு முக்கியஸ்தர்கள், போலீசார் பங்கேற்றனர். அப்போது, கிராமத்தில் ஏதேனும் பிரச்னை ஏற்பட்டால் உடனடியாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்க வேண்டும். காலனி பகுதியில் பஸ்கள் நின்று செல்ல நடவடிக்கை எடுக்கப்படும். பகுதி நேர ரேஷன் கடை, குடிநீர் வசதி செய்து தரப்படும்.வருங்காலத்தில் பிரச்னை இல்லாமல் சுமூகமாக இருக்க வேண்டும் என தாசில்தார் அறிவுறுத்தியதை யேற்று, அனைவரும் கலைந்து சென்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X