சம்பவம் செய்தி

தமிழ்நாடு

உள்ளிருப்பு போராட்டம்

Added : ஆக 14, 2019
Advertisement
 உள்ளிருப்பு போராட்டம்

கடலுார்: ஊழியர் விரோதப் போக்கினைக் கையாளும் அதிகாரிகளை கண்டித்து வருவாய்த்துறை அலுவலர் சங்கம் சார்பில் கடலுார் கலெக்டர் அலுவலகத்தில் உள்ளிருப்பு போராட்டம் நடந்தது.வருவாய்த்துறை அலுவலர்களின் ஊழியர் விரோதப் போக்கினைக் கையாளும் அலுவலக மேலாளரை (பொது) மாற்றம் செய்ய வேண்டும். சங்க நிர்வாகிகளை அலட்சிய போக்குடன் கையாளும் கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) மற்றும் தேசிய நெடுஞ்சாலை, நில எடுப்பு மாவட்ட வருவாய் அலுவலரின் ஊழியர் விரோத போக்கு, பதிவறை எழுத்தர், அலுவலக உதவியாளர்களுக்கு பதவி உயர்வு அளிப்பதில் காலதாமதம் செய்வதை கண்டித்து கலெக்டர் அலுவலகத்தில் உள்ளிருப்பு போராட்டம் நடந்தது.மாவட்டத் தலைவர் மகேஷ் தலைமை தாங்கினார். செயலாளர் ஆறுமுகம், பொருளாளர் ஜான் பிரிட்டோ, துணைத் தலைவர் பூபாலச்சந்திரன், ஸ்ரீதரன், ஜான்சிராணி உட்பட பலர் பங்கேற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X