பொது செய்தி

தமிழ்நாடு

மத்திய அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம் அரசு பணியாளர் சங்கம் முடிவு

Added : ஆக 14, 2019
Advertisement

கடலுார்: மத்திய அரசின் செயலை கண்டித்து வரும் 21ம் தேதி சென்னையில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என அரசு பணியாளர் சங்க சிறப்பு தலைவர் பாலசுப்ரமணியன் தெரிவித்தார்.அவர் நிருபர்களிடம் கூறியதாவது;இட ஒதுக்கீடு சமூக மற்றும் கல்வி ரீதியாக பின்பற்றப்பட்டு வழங்கப்படுகிறது. பிரதமர் மோடி பொருளாதார ரீதியாக 10 சதவீத இட ஒதுக்கீடு அறிவித்துள்ளார். இது சுப்ரீம்கோர்ட் தீர்ப்புக்கு எதிரானது.இதன் அடிப்படையில் சிறைத்துறையில் 26 இடங்கள் நிரப்பப்பட்ட நிலையில் 10 சதவீதத்திற்கு குறைவான மக்கள் தொகை உள்ளவர்கள் அதிகளவில் பயன்பெற்றுள்ளனர். இதுபோன்று மருத்துவ கல்லுாரிகளில் இட ஒதுக்கீடு என்பது நேர்மைக்கு புறம்பானது. எனவே இந்த உத்தரவை மத்திய அரசு திரும்பப்பெற வேண்டும். தொழிலாளர்கள் நலம் தொடர்பாக 44 சட்டங்களை ரத்து செய்துவிட்டு 4 சட்டங்களை அமல்படுத்தியுள்ளனர். தொழிலாளர்களுக்கு குறைந்தபட்ச ஊதியம் ரூ. 4 ஆயிரத்து 628 என்பது கண்டிக்கத்தக்கது; ஏற்க கூடியதல்ல. புதிய கல்விக்கொள்கை என்ற பெயரில் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் திரும்ப பெற வேண்டும்.இதுபட்டியல், பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் உள்ளிட்டவர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும். மத்திய அரசு தனது உத்தரவை வாபஸ் பெற வலியுறுத்தியும், மத்திய அரசின் செயலை கண்டித்தும் வரும் 21ம் தேதி சென்னை அரசினர் விருந்தினர் மாளிகை முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெறும். நிர்வாகிகள் சரவணன், ராஜாமணி உடனிருந்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X