கோர்ட் செய்தி

தமிழ்நாடு

அதிரடி! கிராமங்களுக்கும் வருகிறது ஊழல் ஒழிப்பு நடவடிக்கை

Updated : ஆக 14, 2019 | Added : ஆக 14, 2019 | கருத்துகள் (31)
Share
Advertisement
 ஊழல், ஒழிப்பு ,நடவடிக்கை, வி.ஏ.ஓ, புகார்

மதுரை: கிராமங்களிலும் ஊழல் ஒழிப்பு நடவடிக்கைகளை துரிதப்படுத்தும் வகையில் சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை நேற்று அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. அதாவது 'வி.ஏ.ஓ.க்களின் சொத்து விபரங்களை அதிகாரிகள் ஆய்வு செய்ய வேண்டும். இதில் வருவாய்க்கு அதிகமாக சொத்து சேர்த்தது தெரியவந்தால் குற்ற வழக்கு தொடர்வது உட்பட தகுந்த நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். தாலுகா அலுவலகங்கள் வி.ஏ.ஓ., அலுவலகங்களில் உயரதிகாரிகள், லஞ்ச ஒழிப்பு போலீசார் அவ்வப்போது ஆய்வு மேற்கொள்ள வேண்டும். இதுதொடர்பாக அரசு தக்க உத்தரவுகள் பிறப்பிக்க வேண்டும்' என தெரிவித்துள்ளது.

விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகேயுள்ள மேட்டூரைச் சேர்ந்தவர் காளீஸ்வரி. இவர் ஏற்கனவே திருமணமானவர். அரசு துறையில் 'வாட்ச்மேனாக' பணிபுரிந்த அம்பேத்கர் என்பவரை இரண்டாவதாக திருமணம் செய்தார். அம்பேத்கர் இறந்ததால் கருணை பணி நியமனம் கோரி அரசுக்கு காளீஸ்வரி மனு அனுப்பினார். இவருக்கு பணி வழங்க முதல் மனைவிக்கு பிறந்த மகள் ஆட்சேபம் தெரிவித்தார். அதனால் காளீஸ்வரியின் கோரிக்கையை அருப்புக்கோட்டை ஆர்.டி.ஓ. 2014ல் நிராகரித்தார்.

இதை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையில் காளீஸ்வரி மனுத்தாக்கல் செய்தார். அதில் 'முதல் மனைவியை அம்பேத்கர் சட்டப்படி விவாகரத்து செய்துள்ளார். என் மனுவை நிராகரித்தது சட்டவிரோதம். நிராகரித்த ஆர்.டி.ஓ. உத்தரவை ரத்து செய்து எனக்கு கருணை பணி நியமனம் வழங்க உத்தரவிட வேண்டும்' என தெரிவித்திருந்தார்.

மனுவை விசாரித்த நீதிபதி எஸ்.எம்.சுப்பிர மணியம் உத்தரவு: மனுதாரர் முதல் கணவரை சட்டப்படி விவாகரத்து செய்யவில்லை. அம்பேத்கரை இரண்டாவது திருமணம் செய்ததாக ஏ.லட்சுமியாபுரம் வி.ஏ.ஓ. 2011ல் சான்றளித்துள்ளார். இவ்வாறு சான்று வழங்க வி.ஏ.ஓ.க்கு அதிகாரம் இல்லை. எப்படி வி.ஏ.ஓ. சான்றளித்தார் என்பதற்கு அவரது தரப்பில் சரியான பதில் இல்லை. இதுபோன்ற சான்று வழங்குவது சட்டப்படி தவறு. மனுதாரரின் கோரிக்கை நிராகரிக்கப் படுகிறது.

சான்றுகள் வழங்குவது விண்ணப்பங்கள் வந்தது தொடர்பான பதிவேடுகளை வி.ஏ.ஓ. அலுவலகங்களில் பராமரிப்பதில்லை. தனி பதிவேடு பராமரித்தால் எதிர்காலத்தில் அச்சான்றிதழ்களின் உண்மை தன்மையை உறுதி செய்ய உதவும். தற்போதைய சூழ் நிலையை தீவிரமாக பார்க்க வேண்டும். தனி பதிவேடு பராமரிக்காதது பெரிய முறைகேட்டிற்கு வழி வகுக்கும். வி.ஏ.ஓ.க்கள் அதிகளவில் லஞ்சப் புகார்களை எதிர்கொள்கின்றனர். பிறப்பு முதல் இறப்புச் சான்று வழங்குவது வரை வி.ஏ.ஓ.க்கள் லஞ்சம் கேட்கின்றனர்.

தாலுகா அலுவலகங்களில் லஞ்சம் கேட்பதால் மக்கள் தொந்தரவிற்கு ஆளாகின்றனர். பொது இடங்களை ஆக்கிரமிப்போர் மற்றும் நில அபகரிப்பாளர்களுக்கும் வி.ஏ.ஓ.க்கள் உடந்தையாக உள்ளனர். அரசின் நல உதவிகளை பெற தகுதியற்றவர் களுக்கு தவறான சான்றிதழ்களை வி.ஏ.ஓ.க்கள் வழங்குகின்றனர். இதனால் அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்படுகிறது. எனவே இந்நீதிமன்றம் கீழ்க்கண்ட உத்தரவுகளை பிறப்பிக்கிறது.

* நன்னடத்தை மீறல், கவனக்குறைவு, பணியில் மெத்தனம், வருவாய்க்கு அதிகமாக சொத்து குவித்தல் உள்ளிட்ட பல்வேறு புகார்களுக்கு உள்ளாகும் வி.ஏ.ஓ.க்கள் மற்றும் அரசு அலுவலர்களுக்கு தகுந்த தண்டனை வழங்க வேண்டும்.

* அதற்கேற்ற வகையில் அரசு ஊழியர்கள் மீதான ஒழுங்கு நடவடிக்கை மற்றும் மேல்முறையீட்டு ஒட்டுமொத்த விதிகளிலும் பயனுள்ள வகையில் திருத்தம் கொண்டு வர வேண்டும். இதற்காக ஒரு வரைவு குழுவை வருவாய்த் துறை செயலர் பணியாளர் நலன் மற்றும் நிர்வாக சீர்திருத்தத் துறை செயலர் அமைக்க வேண்டும்

* தாலுகா அலுவலகங்கள் வி.ஏ.ஓ. அலுவலகங்களில் உயரதிகாரிகள் லஞ்ச ஒழிப்பு போலீசார் அவ்வப்போது திடீர் ஆய்வு மேற்கொள்ள வேண்டும். இது தொடர்பாக அரசு உத்தரவு பிறப்பிக்க வேண்டும்

* பணி பதிவேட்டில் உள்ளபடி வி.ஏ.ஓ.க்களின் சொத்து விபரங்களை சரிபார்க்க வேண்டும். இதில் மாறுபாடு இருந்து வருவாய்க்கு அதிகமாக சொத்து சேர்த்தது தெரியவந்தால் குற்ற வழக்கு தொடர்வது உட்பட தகுந்த நடவடிக்கை எடுக்க அனைத்து கலெக்டர்களுக்கும் சுற்றறிக்கை அனுப்ப வேண்டும்

* வி.ஏ.ஓ.க்களின் பணியை மேம்படுத்தும் வகையில் அவர்களின் பணி கடமை பொறுப்புகளை தெரிவிக்க கலெக்டர்களுக்கு அரசு சுற்றறிக்கை அனுப்ப வேண்டும். அதை கலெக்டர்கள் வி.ஏ.ஓ.க்களுக்கு தெரிவிக்க வேண்டும்.

* மக்களிடம் கோரிக்கைகள் தொடர்பாக பெறும் விண்ணப்பங்கள் அதன்படி வழங்கப்படும் அனைத்து சான்றிதழ்கள் குறித்து பதிவு செய்ய நிரந்தர பதிவேட்டை அனைத்து வி.ஏ.ஓ. அலுவலகங்களிலும் பராமரிக்க அரசு வழிகாட்டுதல் சுற்றறிக்கை அனுப்ப வேண்டும். இவ்வாறு நீதிபதி உத்தரவிட்டார்.

Advertisement
வாசகர் கருத்து (31)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
adithyan - chennai,இந்தியா
15-ஆக-201923:10:43 IST Report Abuse
adithyan சிதம்பரம் அவர்கள் நிதி அமைச்சராக இருக்கையில் பிரதமர் பலமுறை கேட்டுக்கொண்டபின்பும் தனது சொத்து விவரங்களை அறிவிக்கவே இல்லையாம் என்று முண்ணால் ஒரு செய்தி தாளில் வந்தது.சிங் பிரதமராக இருந்தபோது பலமுறை ஞாபகப்படுத்தியும் எந்த மந்திரியும் சொத்து விவரங்களை அறிவிக்கவே இல்லையாம். ஏன் கிராம அலுவலர்களுக்கு மட்டும் அழுத்தம்.
Rate this:
Cancel
Saravana kumar - Bangalore,இந்தியா
15-ஆக-201922:32:05 IST Report Abuse
Saravana kumar வரவேற்க தக்க விஷயம் . இதே போல் எல்லா அரசு துறைகளிலும் அமல் செய்ய வேண்டும் .
Rate this:
Cancel
அசோக்ராஜ் - சேலம் ,இந்தியா
15-ஆக-201921:43:08 IST Report Abuse
அசோக்ராஜ் பல வருடங்களாக பசிக்கு ஜாமீன் கொடுத்துவரும் ஓபீ கைநிக்கு இந்த ரூல் சொல்லுங்களேன். கொஞ்சமாவா சேர்த்துருப்பான்?
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X