கேரளாவில் மழை; பலி 104 ஆக உயர்வு

Updated : ஆக 15, 2019 | Added : ஆக 15, 2019 | கருத்துகள் (7)
Advertisement

திருவனந்தபுரம் : பேய் மழையின் பிடியில் சிக்கியுள்ள கேரளாவில், பலியானோர் எண்ணிக்கை, 104 ஆக உயர்ந்துள்ளது. நேற்றும்(ஆக.,14) பல மாவட்டங்களில், பலத்த மழை தொடர்ந்ததால், மக்களால் இயல்பு வாழ்க்கைக்கு திரும்ப முடியாத நிலை காணப்படுகிறது.






கேரளாவின் வடக்கு பகுதியில் உள்ள, மலப்புரம், கண்ணுார் மற்றும் கோழிக்கோடு மாவட்டங்களுக்கு, அதிதீவிர மழை பெய்யும் என்பதற்கான, 'ரெட் அலெர்ட்' எச்சரிக்கை பிறப்பிக்கப்பட்டிருந்தது. அதுபோலவே, நேற்று முன்தினம் இரவு முதல், நேற்று வரை, அங்கு பலத்த மழை பெய்தது.இதனால், ஏற்கனவே பெருகி ஓடிய ஆறுகள், கால்வாய்களில் மேலும் வெள்ளம் பெருக்கெடுத்தது. இதனால், மீட்பு மற்றும் நிவாரண பணிகளை, அங்கு மேற்கொள்ள முடியாத நிலை காணப்பட்டது.


நிலச்சரிவு


மழை நின்றால் தான், நிலச்சரிவில் சிக்கியவர்கள், மண் குவியலில் இறந்து கிடப்பவர்களை மீட்க முடியும் என, மீட்புப் பணியில் ஈடுபட்டு இருந்தோர் கூறினர். குறிப்பாக, பலத்த மழையால், நிலச்சரிவு ஏற்பட்ட, கவலப்பாரா வன கிராமத்தில், நேற்றும், மீட்புப் பணி தொடர முடியாத நிலை காணப்பட்டது. மண் மூடிய வீடுகளில் இறந்து கிடப்பவர்களை, மீட்க முடியாத அளவுக்கு, மழை பெய்தது.

பாதிக்கப்பட்ட பகுதிகளை நேற்றும் பார்வையிட்ட, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த, முதல்வர், பினராயி விஜயன், மழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட ஒவ்வொருவருக்கும், தலா, 10 ஆயிரம் ரூபாய் வழங்க, அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். மேலும், பலியானவர்களின் குடும்பத்திற்கு, 10 லட்சம் ரூபாய், வீடுகளை இழந்தோருக்கு, 4 லட்சம் ரூபாய் வழங்கப்படும் எனவும், அறிவித்தார். நேற்று மாலை நிலவரப்படி, அந்த மாநிலத்தில், மழை, வெள்ளத்திற்கு பலியானோர் எண்ணிக்கை, 102 ஆக உயர்ந்துள்ளது; இரண்டு லட்சம் பேர், முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.


சுற்றுப்பயணம்


காங்கிரஸ் முன்னாள் தலைவர், ராகுல், கேரளாவின் வயநாடு லோக்சபா தொகுதி, எம்.பி.,யாக உள்ளார். அவர் அந்த பகுதிகளில், சுற்றுப்பயணம் மேற்கொண்டு, பாதிக்கப்பட்டோருக்கு ஆறுதல் கூறினார். மேலும், ரிசர்வ் வங்கி கவர்னர், சக்தி காந்ததாசுக்கு கடிதம் எழுதி, விவசாயிகளின் பயிர் கடனை திருப்பிச் செலுத்தும் தேதியை, டிசம்பர், 31ம் தேதி வரை நீட்டிக்க வேண்டும் என, கேட்டுக் கொண்டுள்ளார்.






கர்நாடகா:


பா.ஜ.,வைச் சேர்ந்த, முதல்வர், எடியூரப்பா தலைமையிலான அரசு அமைந்துள்ள கர்நாடகாவில், மழை, வெள்ளத்திற்கு பலியானோர் எண்ணிக்கை, 58 ஆக உயர்ந்துள்ளது. நேற்று, நான்கு உடல்கள் கண்டெடுக்கப்பட்டதை அடுத்து, பலி எண்ணிக்கை அதிகரித்து உள்ளது. நீர் நிலைகளுக்கு, நீர் வரத்து குறைந்ததால், அந்தப் பகுதிகளில், நேற்று நிலைமை முன்னேற்றம் அடைந்திருந்தது. மீட்பு மற்றும் நிவாரண பணிகள், முடுக்கி விடப்பட்டு உள்ளன.


மஹாராஷ்டிரா:


மஹாராஷ்டிராவின் கோலாபூர், சாங்கிலி மாவட்டங்களில், மழை குறைந்து உள்ளதால், ஆறுகளில் வெள்ளம் தணிந்து உள்ளது. இந்த பகுதிகளில், 6.45 லட்சம் பேர், வசிப்பிடங்களில் இருந்து அப்புறப்படுத்தப்பட்டு, பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டிருந்தனர். அவர்கள், இயல்பு வாழ்க்கைக்கு திரும்ப, முயற்சிகள் மேற்கொண்டு வருகின்றனர். பா.ஜ.,வைச் சேர்ந்த, முதல்வர், தேவேந்திர பட்னவிஸ், ''மழை நிவாரண பணிகளுக்காக, மத்திய அரசிடம் இருந்து,9800 கோடி ரூபாய் நிதியுதவி எதிர்பார்க்கிறோம்,'' என்றார்.

Advertisement


வாசகர் கருத்து (7)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
THENNAVAN - CHENNAI,இந்தியா
15-ஆக-201916:25:10 IST Report Abuse
THENNAVAN அவன் தண்ணீர் கொடுக்கலை ஆனால் அவனுக்காக நாம் கணீர் சிந்துகிறோம் அதுதான் தமிழனின் பண்பாடு
Rate this:
Share this comment
Cancel
.Dr.A.Joseph - London,யுனைடெட் கிங்டம்
15-ஆக-201912:16:07 IST Report Abuse
.Dr.A.Joseph கேரளா ஆந்திரா கர்நாடக மாநிலங்களுக்கு அன்பான வேண்டுகோள் இயற்க்கை நீரை தனதாக்கி கொள்ளாமல் தமிழ்நாட்டுக்கு இனியாவது தணண்ணீரை கொடுங்கள்,
Rate this:
Share this comment
Cancel
அருண்நம்பி - Chennai,இந்தியா
15-ஆக-201911:31:03 IST Report Abuse
அருண்நம்பி மிகவும் வருத்தமளிக்கிறது, ஏனோ கடந்த ஆண்டும் இந்த ஆண்டும் மழைவெள்ளம் புரட்டி எடுக்கிறது கேரளாவை... தெய்வ குற்றமோ மனித குற்றமோ ஏதோ ஒன்று...
Rate this:
Share this comment
Nathan - Hyderabad,இந்தியா
15-ஆக-201916:45:24 IST Report Abuse
Nathanசோனியா குற்றம். நகர, சுற்று சூழல் அமைப்பாளர் எவ்வளவு எடுத்துக் கூறியும் பசுமை வழிகளில் வீடுகள் மற்றும் காலணிகள் அமைத்து சொகுசு பார்க்க அனுமதித்தனர் உப்ப கொம்மு அரசுகள். பசுமை வழி (கிறீன் கோரிடார்) தகர்ந்ததால் வெள்ளம் தன வழியை தெடிக் கொள்கிறது....
Rate this:
Share this comment
.Dr.A.Joseph - London,யுனைடெட் கிங்டம்
18-ஆக-201901:17:18 IST Report Abuse
.Dr.A.Josephஇயற்க்கை எல்லாருக்கும் பொதுவானது...
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X