'ராமர் கோவிலை இடித்து தான் பாபர் மசூதி கட்டப்பட்டது'

Updated : ஆக 16, 2019 | Added : ஆக 15, 2019 | கருத்துகள் (26)
Advertisement
பாபர் மசூதி, ராமர் கோவில், விராஜ்மான்

புதுடில்லி : 'அயோத்தியில் தான், கடவுள் ராமர் பிறந்தார் என்பது, ஹிந்துக்களின் நம்பிக்கை. அங்கிருந்த கோவிலை இடித்து தான், மசூதியைக் கட்டியுள்ளனர்' என, ராம் லல்லா விராஜ்மான் சார்பில், உச்ச நீதிமன்றத்தில் வாதிடப்பட்டது.


ஆறாவது நாள்:

உத்தர பிரதேசத்தின் அயோத்தியில் உள்ள சர்ச்சைக்குரிய நிலம் தொடர்பான வழக்கு, உச்ச நீதிமன்றத்தில் நடந்துவருகிறது. தலைமை நீதிபதி, ரஞ்சன் கோகோய் தலைமையிலான, ஐந்து நீதிபதிகள் இடம்பெற்ற, அரசியல் சாசன அமர்வு, இந்த வழக்கை, தினசரி அடிப்படையில் விசாரித்துவருகிறது. விசாரணையின், ஆறாவது நாளான, நேற்று, ராம் லல்லா விராஜ்மான் சார்பில், மூத்த வழக்கறிஞர், சி.எஸ்.வைத்தியாதன், தன் வாதத்தை தொடர்ந்தார்.

அவர் கூறியதாவது: அயோத்தியில், சர்ச்சைக்குரிய நிலம் அமைந்துள்ள பகுதியில் தான், கடவுள் ராமர் பிறந்தார் என்பது, ஹிந்துக்களின் நம்பிக்கை. இது, ஹிந்து மத புராணங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது. இது, எப்படி சாத்தியம் என்ற கேள்விக்குள் நீதிமன்றம் செல்லக் கூடாது. ஆங்கில சுற்றுலா பயணியான, வில்லியம் பின்ச், 1608 - 1611 கால கட்டத்தில், இந்தியாவில் பயணம் மேற்கொண்டார். அவர் எழுதியுள்ள புத்தகத்தில், அயோத்தியில் ராமர் பிறந்ததாக ஹிந்துக்கள் கருதும் இடத்தில், கோட்டை இருந்ததாக கூறியுள்ளார். மேலும், அயோத்தியில் தற்போது சர்ச்சைக்குள்ளாகியுள்ள இடத்தில் தான், ராமர் பிறந்ததாக, ஹிந்துக்கள் நம்புகின்றனர் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

பிரிட்டனைச் சேர்ந்த சுற்றுலா பயணி, மான்ட்கோமரி மார்ட்டின், யூத மதப் பிரசாரகர், ஜோசப் டிபன்தலர் ஆகியோரும், அயோத்தியில் ராமர் பிறந்ததாக மக்கள் நம்புவதாக, தங்களுடைய புத்தகங்களில் குறிப்பிட்டுள்ளனர். முகலாய பேரரசர், பாபரின் நினைவுகளின் தொகுப்பு எனப்படும்,'பாபர்நாமா' என்ற புத்தகத்தில், இது குறித்து எதுவும் குறிப்பிடப்படவில்லை. 19ம் நுாற்றாண்டுக்கு முன், பாபர் மசூதி இருந்ததாக எந்த ஆதாரமும் இல்லை. அயோத்தியில் ராமர் பிறந்த இடத்தில் இருந்த கோவிலை தகர்த்து தான், அங்கு பாபர் மசூதி கட்டப்பட்டுள்ளது.


உறுதி:

இது தொடர்பாக, இரண்டு விதமான தகவல்கள் கிடைக்கின்றன. கோவிலை பாபர் இடிக்கச் சொன்னதாக, ஒரு தகவல் உள்ளது.மற்றொன்று, முகலாய மன்னரான, அவுரங்கசீப், கோவிலை இடித்து, மசூதி கட்டியதாக தகவல் உள்ளது. ஆனால், மசூதியில் இருந்த கல்வெட்டுகளில், பாபர் தான், அதைக் கட்டியிருக்கலாம் என்று கூறப்பட்டுள்ளது. இதில் இருந்து, அயோத்தியில் இருந்த கோவில் இடிக்கப்பட்டு, அங்கு மசூதி கட்டப்பட்டுள்ளது. ஹிந்துக்கள், ராமர் பிறந்த இடமாக நம்பிக்கை வைத்துள்ள இடத்தில், மசூதியை கட்டியுள்ளனர் என்பது உறுதியாகி உள்ளது. இவ்வாறு, அவர் கூறினார்.

Advertisement




வாசகர் கருத்து (26)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Narayan - chennai,இந்தியா
19-ஆக-201908:28:17 IST Report Abuse
Narayan இதில் என்னா குழப்பம் வேண்டியிருக்கு பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே இந்தியா பூராவும் ஹிந்து தெய்வங்கள் சிவன் விஷ்ணு பார்வதி கணேஷ் சுப்ரமணியன் ஸ்ரீராமர் ஸ்ரீகிருஷ்ணன் என்று மூலைக்கு மூலெய் கோயில் கட்டி வழிபட்டார்கள் இஸ்லாம் வழிபடு ஏழாம் நூட்டண்டில் தானே உருவானது நீதிபதிகளுக்கு இது தெரியாமல் இருக்குமா இந்தியா பூராவும் உருவவழிபாடுதானே இருந்தது ஆகவே அந்த இடம் ஹிந்துக்களுக்குத்தான் சொந்தம்
Rate this:
Share this comment
Cancel
skv srinivasankrishnaveni - Bangalore,இந்தியா
19-ஆக-201903:23:52 IST Report Abuse
skv srinivasankrishnaveni வடஇந்தியாலே தான் முஸ்லிம்களோ பாதிப்பும் வேதனைகளும் அதிகம் தெரியுமா விந்தியமலைக்கு கீழே இருந்த மராட்டியர்கள் தெலுங்கர்கள் கன்னடர்கள் ஒரிசா என்ற கலிங்கர்கள் தமிழ்நாடு ஆந்திரா என்று பிரியாமல் ஒரு மாகாணமா மதராஸ் பட்டினமா இருந்தாலும் (இங்கே சேரன் சோழன் பாண்டியன் பல்லவன் என்று சரித்திர பாரம்பரியம் இருந்தது) ஒற்றுமை இல்லென்னும் சொல்லலாம் மொழிவாரியப்பிரச்சாறு நேரு அப்போதே பெரியவர் ராஜாஜி தீர்க்கதரிசியா சொன்னாரு மொழிவாரியாக பிரிச்சால் பிற்காலம் லே பல கஷ்டங்கள் வரும்ன்னு நெருகேட்க்கவே இல்லே யே. தமிழ்நாட்டுல தங்கினானுகளே தெலுங்கு தாயமொழியாக ஒண்ட கருணாநிதியும் வாரிசுகளும் பல தெலுங்காலும் இவாளுக்கு தாயமொழி தெலுங்கு ஆனாலும் ஆந்திராலே எதுவும் தெரியாது படிச்சதும் தமிழ்தான் )பெரியாரின் தாயமொழி கன்னடம் தான் கன்னடம் பேசும் நாயகர்களும் கௌடாஸ்கள் தன்னணி கௌண்டர்கள் என்றும் சொல்லிக்கொள்ளும் நபர்களும் உண்டு கொங்குசீமைலே நதிவாரியாக பிரிச்சுருந்தால் இன்று காவேரிக்கு சண்டையே வந்துருக்காதில்லே அரசியல்வியாதிகள் பஞ்சம் பிழைக்கவே வழிவகுத்தார் நேரு அதுதான் இன்று உண்மையாக இருக்கு தமிழ்நாட்டுலே இருந்த வேதம்படிச்சு தன பாட்டுக்கு வாழ்ந்த பிராமணர்களை அழிச்சு ஒளிச்சுக்கட்டவே தான் பிராம்மணதுவேஷம் கொண்டாந்தாரு பெரியார் அவரின் பஃதால்தான் திமுக அண்ட் அதிமுக அண்ட் திக என்று வெத்துவேட்டுக்கள் இப்போதும் நமது நாட்டின் DEFENCE லே இருக்கும் வடஇந்தியர் களைவிட தென்னிந்தியர்கள் ரொம்பவே கம்மி சிவகாசி தென்காசி போனறடமகளீருந்து ஆர்மி ஏர்போர்ஸ்க்கு போறாங்க வடக்கே பஞ்சாபிலே நிஸ்ச்சயம் ஒரு வீட்டுக்கு ரெண்டுபேராவது DEFENCELE இருக்காங்க இது உண்மை
Rate this:
Share this comment
Cancel
Bharatha Nesan - Chennai,இந்தியா
15-ஆக-201921:13:01 IST Report Abuse
Bharatha Nesan இந்த 73-ஆவது சுதந்திர தினத்தை மகிழ்ச்சியாக கொண்டாடுவதில் பெருமிதம் கொள்வோம், அனைத்துத்தரப்பு மக்களும் கவுரவத்துடனும் வளமுடனும் வாழவும், நமது பாரததேசம் மேலும் மேலும் அனைத்து துறைகளிலும் வளர்ச்சியடைந்து உலக அரங்கில் புகழ்பெற்றுவிளங்க நம் பிஜெபி ஆர்எஸ்எஸ் தலைவர்கள் முழு உடல் ஆரோக்கியத்துடனும் நூறு ஆண்டுகளுக்கு குறையாமல் பலம் மிக்கவர்களாக திகழ்ந்திட பாரதமாதாவிடம் வேண்டுவோம், அன்றன்றாடம் சாமி கும்பிடும் பொழுதும் இறைவனிடம் வேண்டுவோம்.வியாதி போல் நாடு முழுவதும் பரவி இருக்கும் ஊழலை ஒழிப்போம்.லஞ்சம் வாங்க மாட்டேன் கொடுக்கவும் மாட்டேன் என்று சபதம் எடுப்போம்,75-ஆவது சுதந்திர தினம் கொண்டாடும் போது நாட்டில் ஊழல் இருக்கக் கூடாது, நன்றி
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X