பொது செய்தி

இந்தியா

காஷ்மீர் மக்களுக்கு நற்பலன்: ஜனாதிபதி உரை

Updated : ஆக 16, 2019 | Added : ஆக 15, 2019 | கருத்துகள் (6)
Share
Advertisement
புதுடில்லி: ''சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டதால் ஜம்மு - காஷ்மீர் மக்கள் பெரிதும் பலனடைவர்''என ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் கூறினார்.சுதந்திர தினத்தையொட்டி தொலைக்காட்சி மற்றும் வானொலி வாயிலாக ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் நாட்டு மக்களிடையே நேற்று உரையாற்றினார். அவர் கூறியதாவது: ஒரு சுதந்திர தேசமாக 72 ஆண்டுகளை கடந்து 73ம் ஆண்டில் அடியெடுத்து வைக்க உள்ளோம்.
காஷ்மீர் மக்களுக்கு நற்பலன்: ஜனாதிபதி உரை

புதுடில்லி: ''சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டதால் ஜம்மு - காஷ்மீர் மக்கள் பெரிதும் பலனடைவர்''என ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் கூறினார்.

சுதந்திர தினத்தையொட்டி தொலைக்காட்சி மற்றும் வானொலி வாயிலாக ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் நாட்டு மக்களிடையே நேற்று உரையாற்றினார். அவர் கூறியதாவது: ஒரு சுதந்திர தேசமாக 72 ஆண்டுகளை கடந்து 73ம் ஆண்டில் அடியெடுத்து வைக்க உள்ளோம். இந்நேரத்தில் நாட்டின் சுதந்திரத்துக்காக உயிர் தியாகம் செய்த தியாகிகளை வணங்குவோம்.

ஜம்மு - காஷ்மீர் மாநிலத்தில் சமீபத்தில் நிகழ்ந்த மாற்றங்கள் அப்பகுதி மக்களுக்கு மிகுந்த பயனளிக்கும். மத்திய அரசு கொண்டு வந்த மாற்றங்களால் நாட்டின் பிற பகுதி மக்களை போலவே ஜம்மு - காஷ்மீர் மக்களும் சம உரிமை சலுகைகளை பெறுவர். 370வது சட்டப்பிரிவு நீக்கப்பட்டதன் மூலம் காஷ்மீர் மக்களுக்கு கல்வி உரிமை இடஒதுக்கீடு கிடைக்கும்.

பார்லிமென்ட் கூட்டத் தொடரில் முத்தலாக் தடுப்புச் சட்டம் நிறைவேற்றப்பட்டது சிறப்பானது. இதனால் முஸ்லிம் பெண்களின் வாழ்வில் திருப்பம் ஏற்பட்டுள்ளது. மக்களின் வாழ்வாதாரத்தை முன்னேற்றுவதற்கு மத்திய அரசு பல அடிப்படை வசதிகளை வழங்குகிறது. நடந்து முடிந்த பார்லிமென்ட் கூட்டத்தொடரில் பல மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டன. அவற்றின் மீது ஆக்கப்பூர்வமான விவாதங்களும் நடத்தப்பட்டன. அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு பார்லிமென்டில் என்ன நடக்கும் என்பதற்கான அறிமுகம் தான் இது.

ஜனாதிபதி என்ற முறையில் நாட்டின் அனைத்து பகுதிகளுக்கும் சென்று பல்வேறு தரப்பு மக்களை சந்தித்து பேசியுள்ளேன். பழக்க வழக்கங்களிலும் விருப்பங்களிலும் இந்தியர்கள் வேறுபட்டிருக்கலாம்; ஆனால் 130 கோடி மக்களின் கனவு நாட்டின் வளர்ச்சி என்பதாகத் தான் உள்ளது. சுதந்திரம் பெற வேண்டும் என்பது தான் 1947க்கு முன் நமது கனவாக இருந்தது; இப்போது வேகமான வளர்ச்சி தான் நமது கனவாக உள்ளது. இவ்வாறு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் உரையாற்றினார்.

Advertisement


வாசகர் கருத்து (6)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
அசோக்ராஜ் - சேலம் ,இந்தியா
15-ஆக-201921:48:02 IST Report Abuse
அசோக்ராஜ் செய்தியின் தலைப்பைப் பார்த்து சனாதிபதியும் சோசியம் சொல்ல ஆரம்பிச்சுட்டாருன்னு நெனச்சுதேன்.
Rate this:
Cancel
Malick Raja - jeddah,சவுதி அரேபியா
15-ஆக-201912:08:03 IST Report Abuse
Malick Raja கடந்த ஆண்டு சுதந்திர தின நாளில் இருந்தவர்கள் இந்த ஆண்டில் இல்லை என்பதை மனிதர்கள் மட்டுமே உணரமுடியம் என்பதும் உண்மை .. அணைத்து இந்திய மக்களுக்கும் சுதந்திர தின நல்வாழ்த்துக்கள்
Rate this:
Cancel
Balasubramanian - Bangalore,இந்தியா
15-ஆக-201908:03:06 IST Report Abuse
Balasubramanian பாரதியாரின் இந்த கவிதை வரிகளை நினைவு கூர்ந்த ஜனாதிபதியை போற்றுவோம் "மந்திரம் கற்போம் வினைத் தந்திரம் கற்போம் வானை யளப்போம் கடல் மீனை யளப்போம் சந்திரமண்டலத்தியல் கண்டு தெளிவோம்" ( பாரத தேசம் _ கவிதையில் வரும் வரிகள்) அவனது சந்திர மண்டல கனவு நிறைவேறிய இந்த சுதந்திர நன்னாளில் ஜெய பேரிகை கொட்டுவோம். ஜெய் ஹிந்த்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X