சம்பவம் செய்தி

தமிழ்நாடு

ரூ.19 லட்சம் மதிப்பு தங்கம் வெளிநாட்டு மது பறிமுதல்

Added : ஆக 15, 2019
Advertisement
 ரூ.19 லட்சம் மதிப்பு தங்கம் வெளிநாட்டு மது பறிமுதல்

சென்னை:பாங்காக் மற்றும் ரியாத் நகரங்களில் இருந்து கடத்தி வரப்பட்ட, 19 லட்சம் ரூபாய் மதிப்புள்ள தங்கம் மற்றும் வெளிநாட்டு மதுபானங்களை, சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
தாய்லாந்து தலைநகர் பாங்காக்கில் இருந்து, 'தாய் ஏர்வேஸ்' விமானம், நேற்று முன்தினம் நள்ளிரவு, 12 மணிக்கு, சென்னை வந்தது. அந்த விமானத்தில் வந்த, சென்னையைச் சேர்ந்த சூசை அலெக்சாண்டர், 42, ராபர்ட் டிங்கு, 29, ஆகிய இருவரிடமும், சந்தேகத்தின் அடிப்படையில், சுங்கத் துறை அதிகாரிகள் சோதனையிட்டனர்.அப்போது இருவரதுஉடைமைகளுக்குள் இருந்து, ௨௧௦ கிராம் தங்கம், வெளிநாட்டு மதுபானங்கள், சிகரெட்டுகள், 9.84 லட்சம் ரூபாய் மதிப்பில் பறிமுதல் செய்யப்பட்டது.மற்றொரு சம்பவத்தில், சவுதி அரேபியா தலைநகர், ரியாத் நகரில் இருந்து ஷார்ஜா வழியாக, 'ஏர் அரேபியா' விமானம், நேற்று முன்தினம் அதிகாலை, 3:40 மணிக்கு, சென்னை வந்தது. விமானத்தில் வந்த, ஐதராபாதைச் சேர்ந்த நசீர் பாஷா, 54, என்பவர் கொண்டு வந்த, 'எமர்ஜென்சி' விளக்கை, சந்தேகத்தின் அடிப்படையில் சோதனையிட்ட போது, அதன் உள்ளே மறைத்து வைக்கப்பட்டிருந்த, 233 கிராம் தங்கம், 9.57 லட்சம் ரூபாய் மதிப்பில் பறிமுதல் செய்யப்பட்டது.கடத்தலில் ஈடுபட்ட நபர்களிடம், சுங்கத் துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X