எக்ஸ்குளுசிவ் செய்தி

தமிழ்நாடு

தமிழக சம்பா சாகுபடிக்கு உரம்; டன் கணக்கில் தருகிறது மத்திய அரசு

Added : ஆக 15, 2019 | கருத்துகள் (4)
Advertisement
சம்பா சாகுபடி, உரம்,  மத்திய அரசு,  ஒப்புதல், தருகிறது

சம்பா சாகுபடிக்கு தேவையான உரங்களை வழங்க, மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.

தமிழகத்தில், சம்பா பருவ நெல் சாகுபடிக்கு உகந்த சூழல் நிலவி வருகிறது. பாசனத்திற்காக, சேலம் - மேட்டூர் அணை திறக்கப்பட்டு உள்ளது; ஈரோடு - பவானிசாகர் உள்ளிட்ட அணைகள், திறக்கப்பட உள்ளன.

இந்த நீரை பயன்படுத்தி, சம்பா சாகுபடிக்கான ஏற்பாடுகளில், விவசாயிகள் கவனம் செலுத்தி வருகின்றனர். சம்பா பருவம் உச்சக்கட்டத்தை அடையும் நேரத்தில், உரம் தட்டுப்பாடு அதிகரிக்கும். அவற்றை பதுக்கி, கூடுதல் விலையில் விற்கும் நடவடிக்கைகள் துவங்கும். இது, விவசாயிகளின் சாகுபடி செலவை உயர்த்தும்.

எனவே, உரங்களை போதுமான அளவில் இருப்பு வைக்க, வேளாண் துறை செயலர், ககன்தீப்சிங் பேடி, இயக்குனர் தட்சிணாமூர்த்தி ஆகியோர் நடவடிக்கை எடுத்துள்ளனர். இதற்காக, சம்பா சாகுபடிக்கு தேவையான உரங்களை வழங்கும்படி, தமிழக வேளாண் துறை தரப்பில், மத்திய அரசிடம் வலியுறுத்தப்பட்டது. இதை ஏற்று, தமிழகத்திற்கு தேவையான உரங்களை வழங்க, மத்திய உரத்துறை அமைச்சகம் நடவடிக்கை எடுத்துள்ளது.

இதுகுறித்து, வேளாண் துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது: தற்போது, தொடக்க வேளாண்மை கூட்டுறவு மற்றும் தனியாரிடம், 1.89 லட்சம் டன் யூரியா; 1.22 லட்சம் டன் டி.ஏ.பி., உரம்; 2.38 லட்சம் டன் கூட்டு உரங்கள்; 86 ஆயிரத்து, 216 டன் பொட்டாஷியம் உரமும் இருப்பு உள்ளன.

வேளாண் துறையின் கோரிக்கையை ஏற்று, 81 ஆயிரம் டன் யூரியா; 29 ஆயிரம் டன் டி.ஏ.பி., உரம்; 34 ஆயிரத்து, 650 டன் பொட்டாஷியம்; 73 ஆயிரத்து, 900 டன் கூட்டு உரங்கள் வழங்க, மத்திய அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது. இம்மாத இறுதிக்குள், இந்த உரங்களை அனுப்பி வைக்கும் நடவடிக்கைகள் துவங்கியுள்ளன. இவை வந்து சேர்ந்தால், எவ்வித தட்டுப்பாடும் இன்றி, சம்பா சாகுபடியை முடித்து விடலாம். இவ்வாறு, அவர் கூறினார்.

- நமது நிருபர் -

Advertisement
வாசகர் கருத்து (4)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Rajesh - Chennai,இந்தியா
20-ஆக-201904:24:49 IST Report Abuse
Rajesh முதல்ல நிலத்தை மலடாக்கினானுங்க, அப்புறம் இப்போ இருக்குற இளைஞர்களை மலடாகிக்கொண்டிருக்கிறார்கள், எங்க பார்த்தாலும் infiertility centers எங்கபோகுதோ நாடு.
Rate this:
Share this comment
Cancel
Endrum Indian - Kolkata,இந்தியா
15-ஆக-201916:08:36 IST Report Abuse
Endrum Indian இப்போ எல்லாம் எல்லாரும் ஆர்கானிக் என்று கேட்டு வாங்கும்போது இதை எப்படி விற்பது???
Rate this:
Share this comment
Cancel
sathiya narayanan - Dallas,யூ.எஸ்.ஏ
15-ஆக-201907:04:58 IST Report Abuse
sathiya narayanan இதுல என்ன ஐயா ஒப்புதல் கண்டீங்க . அது தமிழ்நாட்டுக்கும் அரசுதான். அது மத்திய அரசின் கடமை . நாங்க வரி கட்டுகிறோம் அரசுக்கு. அவர்கள் இதை செய்வது அவர்களுடைய கடமை.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X