பொது செய்தி

தமிழ்நாடு

பாதாள சாக்கடை திட்டம் முதல்வர் துவக்கினார்

Added : ஆக 15, 2019
Advertisement

சென்னை:கத்திவாக்கம் பாதாள சாக்கடை திட்டம் உள்ளிட்ட பல்வேறு கட்டமைப்பு வசதிகளை, முதல்வர், இ.பி.எஸ்., நேற்று திறந்து வைத்தார்.

சென்னை குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீரகற்று வாரியம் சார்பில், கத்திவாக்கத்தில், 86.15 கோடி ரூபாய் மதிப்பில், பாதாள சாக்கடை திட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளது. சென்னை மாநகராட்சி கட்டடங்களின் மேற்கூரைகளில், சூரிய மின் உற்பத்தி தகடுகள் அமைக்கப்படுகின்றன.சைதாப்பேட்டையில், சலவையாளர்களுக்கு, 3.10 கோடி ரூபாய் செலவில், ஓய்வறைகள், சலவை அறைகள், தேய்ப்பறைகள் மற்றும் உலர்த்தும் அறைகள் கட்டப்பட்டுள்ளன. சென்னை, பெருங்குடி, அண்ணா நெடுஞ்சாலை பகுதியில், 2.39 கோடி ரூபாயில், பூங்கா அமைக்கப்பட்டுள்ளது. இவை அனைத்தையும், முதல்வர், இ.பி.எஸ்., நேற்று, 'வீடியோ கான்பரன்ஸ்' வழியே, திறந்து வைத்தார். நிகழ்ச்சியில், அமைச்சர்கள் வேலுமணி, ஜெயகுமார், தலைமைச் செயலர், சண்முகம் மற்றும் அதிகாரிகள் பங்கேற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X