பொது செய்தி

தமிழ்நாடு

வாக்காளர் பட்டியல் சரிபார்ப்பு மாவட்டத்தில் நாளை துவக்கம்

Added : ஆக 15, 2019
Share
Advertisement

கோவை:வாக்காளர்கள், தாமாக முன் வந்து, பட்டியலை சரி பார்க்கும் பணி, கோவை மாவட்டத்தில், நாளை தொடங்கி செப்.,30 வரை நடக்கிறது.

இது குறித்து, கோவை கலெக்டர் ராஜாமணி கூறியுள்ளதாவது:வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்க முறை பணிக்கு முன்னதாக, பட்டியலில் பதிவுகள் சரியாக உள்ளதா என்பதை உறுதிப்படுத்தும் திட்டத்தை தேர்தல் ஆணையம் செயல்படுத்தியுள்ளது. அதன்படி, பட்டியலில் இருக்கும் தமது பதிவுகள் சரியாக உள்ளனவா என்று, வாக்காளர்கள் தாமாக முன்வந்து சரி பார்க்க வேண்டும்.

பாஸ்போர்ட், டிரைவிங் லைசென்ஸ், ஆதார் அட்டை, ஸ்மார்ட் ரேஷன் கார்டு, தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்ட வேறு ஏதேனும் ஆவணங்களை கொண்டு உறுதிப்படுத்த முடியும். பொதுமக்கள், வாக்காளர் பட்டியலை, voters helpline app என்ற செயலி அல்லது nvsp என்னும் இணைய வழி சேவை அல்லது பொது சேவை மையங்கள் அல்லது ஓட்டுச்சாவடி நிலை அலுவலர்கள் மூலம் சரிபார்க்க முடியும்.

வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லாதவர்கள், குடி பெயர்ந்தவர்கள், இறந்து போனவர்கள் பற்றிய தகவல்களை, அந்தந்த பகுதியில் உள்ள ஓட்டுச்சாவடி நிலை அலுவலர்களிடம் வழங்கலாம். இந்த பணி, ஆக.,16 முதல் செப்.,30 வரை நடக்கிறது.

இந்த பணியின்போது, தங்கள் பகுதிக்கு வரும் ஓட்டுச்சாவடி நிலை அலுவலர்களிடம், தங்களது பதிவுகளை உறுதிப்படுத்திக் கொள்ளலாம். பெயர் சேர்ப்பு, பதிவு நீக்கம், பதிவு திருத்தம் ஆகியவற்றுக்கு உரிய படிவங்களை அளித்து, தங்களது பதிவுகளை உறுதிப்படுத்திக் கொள்ளலாம்.இவ்வாறு, கலெக்டர் தெரிவித்துள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X